அபிஷேக் சர்மாவிடம் சரக்கு இல்லை… பாயிண்டை பிடித்த Ex பாகிஸ்தான் வீரர் – முழு பின்னணி இதோ!

Abhishek Sharma Weakness: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 (ICC T20 World Cup 2026) தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று நிறைவடைந்து, சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்கி உள்ளது. நடப்பு சாம்பியன் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இந்திய அணி உள்ள முதல் பிரிவில் ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்க அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

Add Zee News as a Preferred Source

இதுவரை இந்திய அணி (Team India) குரூப் சுற்றில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை தோற்கடித்திருந்தது. இதில் இந்திய அணியின் அதிரடி ஓபனர் அபிஷேக் சர்மா 3 போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் டக்அவுட்டாகி உள்ளார். இது இந்திய ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை இந்திய அணி பிளேயிங் லெவனுக்கு தேர்வு செய்யுமா என கேள்விகள் குவிகின்றன. ஆனால், அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக விளையாடுவார் என அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அபிஷேக் சர்மாவிடம் சரக்கு இல்லை…

இந்நிலையில், அபிஷேக் சர்மாவின் பலவீனம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் (Mohammad Amir) கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ஓபனர் அபிஷேக் சர்மா பேட்டிங் செய்யும்போது கண்ணை மூடிக்கொண்டு சுற்றுகிறார் என விமர்சனம் வைத்துள்ளார். அபிஷேக் சர்மா (Abhishek Sharma) குறித்து முகமது ஆமிர் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,  “நான் பார்த்தவரையில், நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், அவர் கண்ணை மூடிக்கொண்டு சுற்றுகிறார், அனைத்து பந்துகளையும் அடித்து ஆட வேண்டும் என நினைக்கிறார். ஒரு நாள் அவருக்கு அனைத்து பந்துகளும் சிக்கிவிடும், அப்போது அது சரி. ஆனால், அவர் சொதப்புவதற்கே அதிக வாய்ப்புள்ளது. 8 இன்னிங்ஸிற்கு ஒருமுறைதான் அவர் சிறப்பாக விளையாடுகிறார். இல்லையெனில் 10, 15, 0 அல்லது 20 ரன்களையே எடுக்கிறார். அவர் சிறந்த பேட்டிங் நுட்பத்தை பெற்றிருக்கிறார் என எனக்கு தோன்றவில்லை” என்றார்.

சயும் அயூப்பும் இப்படிதான்… 

மேலும், பாகிஸ்தான் வீரர் சயும் அயூப்பின் ஆட்டத்தையும், அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தையும் ஒப்பிட்டு முகமது ஆமிர் பேசியிருந்தார். அதில், “சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடியபோது சயும் அயூப்பிற்கும் இதே பிரச்னைதான் இருந்தது, அப்போது அவர் புதியவர், நோ-லுக் ஷாட்களை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். அவரது அனைத்து ஷாட்களும் லெக்-சைடில் இருந்ததால் அவரது பலவீனம் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. 

ஆனால் நீங்கள் மூன்றாவது அல்லது நான்காவது ஸ்டம்ப் லைனில் பந்தை வீசினால், முடிவு எடுக்க அவர் திணறினார். கடைசி இரண்டு போட்டிகளிலும் அவர் ஆப்-சைடில் அடிக்கச் சென்று அவுட்டாகியிருந்தார். அவர் ஆப்-சைடில் நல்ல ஷாட்களை அடித்து பழக்கப்படாவிட்டால் அவர் முன்னேற்றம் அடையமாட்டார். பலம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உங்களின் பலவீனத்தை சோதிப்பார்கள், உங்களின் விருப்பமான ஷாட்களை விளையாடவே விடமாட்டார்கள்” என்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பலவீனம் தெரிந்துவிடும்… 

தொடர்ந்து பேசிய அவர், “அதேதான் அபிஷேக் சர்மாவுக்கும்… அவர் அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அழுத்தம் நிறைந்த பெரிய போட்டிகளிலோ அல்லது ஒருநாள் போட்டிகளிலோ உங்களால் அனைத்து பந்துகளையும் அடித்து விளையாட முடியாது. சல்மான் அலி ஆகா மற்றும் ஆர்யன் தத் ஆகியோர் அவர் அப்படிதான் விக்கெட் எடுத்தார்கள், சர்வதேச கிரிக்கெட் உங்களின் பலவீனத்தை வெளிக்கொண்டு வந்துவிடும்” என்றார்.

மேலும் படிக்க | IND vs SA Super 8: இந்திய அணியின் பிளேயிங் 11.. ஒரே ஒரு மாற்றம்! உள்ளே வரும் முக்கிய வீரர்

மேலும் படிக்க | இந்திய அணி செமி பைனல் போகாது… டி20 உலகக் கோப்பை கிடைக்காது – காரணம் என்ன?

மேலும் படிக்க | இந்தியா – தென்னாபிரிக்கா சூப்பர் 8 போட்டி! முக்கிய வீரருக்கு காயம்?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.