2026 டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து குரூப் போட்டிகளும் முடிவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் சூப்பர் 8 போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா அடித்த பந்து வேகமாக சென்று சிராஜின் காலில் பட்டது. முழங்காலுக்கு கீழே பந்து பட்டதால் சிராஜ் உடனடியாக வலியால் துடித்தார். மைதானத்திலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார். உடனடியாக சிராஜிடம் சென்று தேவையான முதல் உதவிகளை பயிற்சியாளர் குழு வழங்கியது. அணியின் பிசியோதெரபிஸ்ட் தன்னுடைய பங்கை அளித்தார். இருப்பினும் சிராஜால் சிறிது நேரம் நிற்க கூட முடியவில்லை. சிராஜிற்கு பெரிய காயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
Add Zee News as a Preferred Source

சிராஜிற்கு என்ன ஆனது?
ஹர்திக் பாண்டியா அடித்த பந்து நேராக சிராஜின் முழங்காலில் பட்டதால், அவரால் நிற்கக்கூட முடியவில்லை. உடனடியாக பயிற்சி நடக்கும் இடத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவ குழு அவரை முழுவதுமாக பரிசோதித்து வலி உள்ள இடங்களில் சிகிச்சை அளித்தனர். தற்போது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் சிராஜ் ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர். ஹர்ஷித் ராணா காயம் காரணமாக வெளியேறிய நிலையில், சிராஜ் கடைசி நேரத்தில் அணிக்குள் நுழைந்தார். டி20 உலக கோப்பை தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அணியில் இணைந்த அவர், முதல் போட்டியிலேயே விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அடுத்த போட்டியில் பும்ரா இடம்பெற்று இருந்தாலும், பேக்கப் வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் சிராஜின் தேவை அணிக்கு அதிகமாகவே உள்ளது.
மீண்டும் பயிற்சியில் சிராஜ்
முழங்காலில் பந்து பட்டதால் சிறிது நேரம் ஓய்வில் இருந்த சிராஜ் பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பயிற்சியில் அவர் மீண்டும் பந்து வீசுவதை பார்க்கும் போது அவருக்கு பெரிய விதமான காயம் ஏற்படவில்லை என்பது தெரிகிறது. இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் இந்த காயம் பெரிதாக மாறாத அளவிற்கு மருத்துவ குழு வையான முதல் உதவிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் 8 போட்டிகள் நெருங்கிய உள்ள நிலையில் ஒவ்வொரு வீரரின் உடல் தகுதியும் அணிக்கு முக்கியமானதாக மாறி வருகிறது.
Siraj in pain after getting hit by a shot from Hardik Pandya #T20WorldCup pic.twitter.com/jBMqPyIXhF
— Karishma Singh (@karishmasingh22) February 20, 2026
சிராஜின் முக்கியத்துவம்
டி20 உலக கோப்பையில் இடம் பெற்றுள்ள சிராஜ், அதற்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். கடைசியாக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற சிராஜ் டி20 அணியில் இடம் பெறவில்லை. ஹர்ஷித் ராணா கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலக, அவருக்கு பதிலாக இடம் பிடித்தார் சிராஜ். இருப்பினும் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். பும்ராவிற்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக இருப்பவர் சிராஜ் மட்டுமே.
சூப்பர் 8
சூப்பர் 8 சுற்றுக்கான தயாரிப்பில் இந்தியா தற்போது முழு வேகத்தில் உள்ளது. நெட்ஸ் பகுதியில் ஹார்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்றவர்கள் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு, ஸ்பின் பந்துவீச்சை கையாண்டு விளையாடுதலிலும், பவர் ப்ளே ஓவர்களில் முழு பயனடைவதிலும் பெரும் கவனம் செலுத்தப்படுகிறது. முகமது ஸிராஜுக்கு ஏற்பட்ட இந்த திடீர் காயம்-பயம், இறுதியில் பெரிய அபாயமாக மாறாமல் தப்பியிருப்பது இந்திய அணிக்கும், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கும் ஒரு பெரிய நிம்மதி.
About the Author
RK Spark