Shikhar Dhawan Marriage: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவாண் (40) அவரது நீண்டநாள் காதலி சோபி ஷேனை இன்று (பிப். 21) திருமணம் செய்துகொண்டார். கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்த ஜோடி, இன்று திருமணம் செய்துகொண்டனர்.
Add Zee News as a Preferred Source
யுஸ்வேந்திர சஹால் வெளியிட்ட புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிகர் தவாணின் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதன்மூலம், ஷிகர் தவாணின் திருமணம் பொதுவெளிக்கு தெரியவந்துள்ளது. “என் நண்பன் திருமணம் செய்து கொள்கிறான்” என யுஸ்வேந்திர சஹால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
ஓராண்டு காதல்
கடந்தாண்டு மே மாதம் தங்களது காதல் உறவு குறித்து ஷிகர் தவாண் பொதுவெளியில் அறிவித்தார். கடந்த ஜனவரி 12ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததை ஷிகர் தவாண் இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். சோபி ஷேன் பகிர்ந்துகொண்ட புகைப்படத்தின் மூலம், நேற்று ஷிகர் தவாண் – சோபி ஷேன் ஜோடி அவர்களது ஹல்தி விழாவை கொண்டாடி உள்ளனர். கடந்தாண்டு மார்ச் மாதம் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் ஷிகர் தவாண் மற்றும் சோபி ஷேன் இருவரும் பொதுவெளியில் முதல்முறையாக ஜோடியாக தோன்றினர். ஊடக நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது பேசிய ஷிகர் தவாண், தனக்கு மீண்டும் காதல் கைக்கூடிவிட்டதாக கூறியிருந்தார்.
யார் இந்த சோபி ஷேன்?
அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, சோபி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்ததவர், தயாரிப்பு ஆலோசகராக உள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிதிச் சேவை நிறுவனமான நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன் தயாரிப்பு ஆலோசகர், 2வது துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் அயர்லாந்தில் மார்கெட்டிங் மற்றும் மேலாண்மை துறையில் பட்டம் பெற்றவர் ஆவார். சோபி ஷைன் தற்போது துபாயில் பணியாற்றும் நிலையில், துபாயில்தான் ஷிகர் தவாணுக்கும், ஷோபி ஷைனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஷிகர் தவாணின் முதல் திருமணம்
ஷிகர் தவாணுக்கு இது இரண்டாவது திருமணமாகும். கடந்த 2011ஆம் ஆண்டில் ஆயிஷா முகர்ஜி என்பவரை ஷிகர் தவாண் திருமணம் செய்துகொண்டார். 11 ஆண்டுகால திருமண வாழ்வில் இவர்களுக்கு சோரவர் எனும் ஒரே ஒரு மகன் உள்ளார். ஆயிஷாவுக்கு அவரது முதல் திருமணத்தின் மூலம் இரண்டு பெண்கள் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆயிஷா – தவாண் ஜோடி சட்டப்பூர்வமாக பிரிந்தது. மகனை தன்னிடம் இருந்து பிரித்து வைத்திருப்பதால் ஷிகர் தவாண் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும், எனவே மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறும் தவாண் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். ஆனால், மகன் சோரவரை நிரந்தரமாக கவனித்துக்கொள்ளும் பொறுப்பை தவாணுக்கு வழங்கவில்லை. அதேநேரத்தில் மகனை சந்திக்கவும், வீடியோ கால் செய்யவும் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அதன்பின் தொடர்ச்சியாக அவரது மகனுடன் வீடியோ காலில் பேச தன்னை ஆயிஷா அனுமதிக்கவில்லை என்றும் ஷிகர் தவாண் குற்றஞ்சாட்டி வந்தார்.
ஓய்வு பெற்ற ஷிகர் தவாண்
ஷிகர் தவாண் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் இரண்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார். ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றார். 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையை ஷிகர் தவாண் 38 வயதில் நிறைவுசெய்தார். இவர் 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஓடிஐ போட்டிகள், 68 டி20ஐ போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி மொத்தம் 10,867 ரன்களை குவித்துள்ளார். ஓடிஐ போட்டிகளில் 17 சதம், டெஸ்டில் 7 சதம் என 24 சதத்தை ஷிகர் தவாண் அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் மொத்தம் 221 இன்னிங்ஸில் 6769 ரன்களை ஷிகர் தவாண் குவித்துள்ளார்.
மேலும் படிக்க | அபிஷேக் சர்மாவிடம் சரக்கு இல்லை… பாயிண்டை பிடித்த Ex பாகிஸ்தான் வீரர் – முழு பின்னணி இதோ!
மேலும் படிக்க | IND vs SA Super 8: இந்திய அணியின் பிளேயிங் 11.. ஒரே ஒரு மாற்றம்! உள்ளே வரும் முக்கிய வீரர்
மேலும் படிக்க | இந்திய அணி செமி பைனல் போகாது… டி20 உலகக் கோப்பை கிடைக்காது – காரணம் என்ன?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More