IND vs SA Super 8: இந்திய அணியின் பிளேயிங் 11.. ஒரே ஒரு மாற்றம்! உள்ளே வரும் முக்கிய வீரர்

India Predicted XI For Super 8 Against South Africa: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது சூப்பர் 8 சுற்றை எட்டி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் லீக் ஆட்டங்களில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

India vs South Africa Super 8 Match: நாளை இந்தியா தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி 

இந்த சூழலில், இந்திய அணி நாளை (பிப்ரவரி 22) சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கு அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு எளிதாகிவிடும். அதன் காரணமாக இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

Washington Sundar vs Axar Patel: வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அக்சர் படேல்

இந்திய அணியின் பிளேயிங் 11ல் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் இருந்தால் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே இருக்கும் என்றும் தெரிகிறது. அதாவது, இப்போட்டியில் துணை கேப்டன் அக்சர் படேல் பிளேயிங் 11க்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் விளையாடினார். தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் விளையாடுவார் என தெரிகிறது. 

Abhishek Sharma: அபிஷேக் சர்மாவை பிளேயிங் 11ல் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா லீக் ஆட்டங்களில் கடுமையாக சொதப்பிய நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் அவர் விளையாடுவாரா அல்லது அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. அதற்கு உதவி பயிற்சியாளர் மோர்னே மோர்கல், அபிஷேக் சர்மாவை பிளேயிங் 11ல் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என பதிலளித்திருக்கிறார். இதன் மூலம், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக தெரிகிறது. 

இந்திய அணி தொடர்ந்து வெற்றியை பெற்று வருவதால், மேலே குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை தவிர்த்து வேறு எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 

India Predicted XI For Super 8 Against South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.