NTK: 234 வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில் போட்டியிடும் சீமான்!

‘மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார்.

இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள் 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் அனைவரும் பட்டப் படிப்பை முடித்தவர்கள்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

பர்ஹானா பாத்திமா நாகப்பட்டிணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்களை தாண்டி, நடிகர் திருமுருகன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.