NZ vs PAK: ஒரு பால் கூட வீசவில்லை; மழையால் சூப்பர் 8 போட்டி ரத்து… பாயிண்ட்ஸ் எப்படி?

ICC T20 World Cup 2026, NZ vs PAK Match abandoned: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. போட்டியில் டாஸ் மட்டும் வீசப்பட்ட நிலையில், டாஸ் வென்று பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார்.

Add Zee News as a Preferred Source

தொடர்ந்து பெய்த மழை

பாகிஸ்தான் அணியில் கவாஜா நவஃபேவிற்கு பதில், ஃபக்கர் ஜமான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் கைல் ஜேமீசன், ஜேக்கப் டஃபி ஆகியோருக்கு பதில் இஷ் சோதி, லோக்கி பெர்குசன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். ஆனால் டாஸ் வீசியபோதே மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தாலும், மைதானத்தில் மழைநீர் தேங்கியதாலும் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. மைதான பணியாளர்கள் தொடர்ந்து மழைநீரை வெளியேற்ற முயற்சித்தாலும் தொடர் மழையால் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை.

இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி 

இதனால் டாஸ் வீசப்பட்டும் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையின் காரணமாக போட்டி முழுமையாக கைவிடப்பட்டது. இதனால், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் 8 சுற்று போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது. சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உடன் இலங்கை, இங்கிலாந்து அணிகளும் உள்ளன.

சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியில் விளையாட வேண்டும். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இன்னும் 2 போட்டிகள் சூப்பர் 8 சுற்றில் உள்ளன, இரண்டிலும் வெல்லும் அணிகளுக்கே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

நாளைய போட்டிகள்

முதல் பிரிவில் இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்றில் நாளை மதியம் 3 மணிக்கு கண்டி நகரில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன, இரவு 7 மணிக்கு அகமதாபாத் நகரில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. வரும் பிப். 24ஆம் தேதி பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியையும்; பிப். 25ஆம் தேதி நியூசிலாந்து அணி, இலங்கை அணியையும் சந்திக்க உள்ளன. மார்ச் 1ஆம் தேதிவரை சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறும்.

மேலும் படிக்க | அபிஷேக் சர்மாவிடம் சரக்கு இல்லை… பாயிண்டை பிடித்த Ex பாகிஸ்தான் வீரர் – முழு பின்னணி இதோ!

மேலும் படிக்க | IND vs SA Super 8: இந்திய அணியின் பிளேயிங் 11.. ஒரே ஒரு மாற்றம்! உள்ளே வரும் முக்கிய வீரர்

மேலும் படிக்க | இந்திய அணி செமி பைனல் போகாது… டி20 உலகக் கோப்பை கிடைக்காது – காரணம் என்ன?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.