இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மா இல்லை? மாற்று வீரர் இவரா?

இந்திய அணி இன்று தங்களது முதல் சூப்பர் 8 போட்டியில் விளையாட உள்ளது. அகமதாபாத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இன்று விளையாட உள்ளனர். இந்திய அணி லீக் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றிருந்தாலும், ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மாவின் பார்ம் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த உலக கோப்பையில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் கோல்டன் டக் ஆகியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்று சில குரல்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்பதால் தான் அவர் வெளியேறி உள்ளார். இந்நிலையில் அபிஷேக் ஷர்மா வெளியேற்றப்பட வேண்டுமா என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

Stay Tuned for The Morkels as we gear up for the #INDvSA Super 8 clash in Ahmedabad! 

Coming #TeamIndia0WorldCup | #MenInBlue pic.twitter.com/xqeWbNGNrX

— BCCI (@BCCI) February 21, 2026

சூர்யகுமார் யாதவ் பதில் 

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் சூர்யா குமார் யாதவ், “அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் பற்றி கவலைப்படுபவர்களை பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது. அவர் இன்னும் ரன் எடுக்கவில்லை என்பதால், இனிமேல் அவரை எதிர்கொள்ள போகும் அணிகளுக்கு மட்டும் தான் கவலைப்பட வேண்டியிருக்கும். கடந்த ஆண்டு அபிஷேக் சர்மா நம்மில் யார் தடுமாறும் போதெல்லாம் ஒரு தூண்போல் நின்று அணியை காப்பாற்றினார். அவர் நம்மை மறைத்தார். இப்போது நம் முறை – அவரை நாம் மறைக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா?

அபிஷேக் சர்மாவை விட்டு விட்டு சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறதே என்ற கேள்விக்கு சூர்யகுமார் நேரடியாக பதில் தரவில்லை.  ஆனால் அணியில் மாற்றம் தேவை என்ற கருத்தை அவர் மறுத்துள்ளார். “அபிஷேக் சர்மா ஒருமுறை ரன்களை அடிக்க ஆரம்பித்தால், அவரை நிறுத்துவது மிகவும் கஷ்டம் என்பது எல்லாருக்கும் தெரியும். அவருக்கே உரிய பாணியில் இன்னிங்ஸை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். ஒரு ஆட்டம் அவருக்கு சாதகமாக திரும்பினால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

சூப்பர்-8 சுற்றில் இந்தியா

சூப்பர்-8 சுற்றில் இந்தியா வரும் அன்று அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி ஆஃப்-ஸ்பின்னர்களை அதிகமாக பயன்படுத்தி இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்த வரிசையை குழப்ப திட்டமிடலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அந்த சவாலை சமாளிக்கவும் தயாராகி வருவதாக சூர்யகுமார் கூறியுள்ளார். மொத்தத்தில் அபிஷேக் சர்மாவை ஆட்டத்திலிருந்து விலக்க வேண்டும் என்ற சத்தங்களுக்கு நேரடியாக இல்லை என்று சொல்லாமல் சொன்ன கேப்டன் சூர்யகுமார் யாதவ், வெளியில் உள்ள விமர்சனங்களை விட அணியுள்ளே உள்ள நம்பிக்கையே அதிகம் என்று காட்டியுள்ளார்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.