CSK MS Dhoni Latest News: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபப்டும் 19வது ஐபிஎல் சீசன் மார்ச் மாதத்தின் இறுதியில் தொடங்கும் என தெரிகிறது. இந்த சீசனில் மூத்த வீரரான தோனி விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அது குறித்த தகவலும் சரிவர இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக தோனி ஓய்வு பெற போகிறார் என சில ஊடங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
Add Zee News as a Preferred Source
44 வயதாகும் எம்.எஸ். தோனி ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணித்து வருகிறார். சிஎஸ்கே அணியின் ஒரு அடையாளமாக விளங்கும் தோனி, ஓய்வு பெறப்போகும் என்ற செய்திகள் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு முக்கிய தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.
வரும் 2026 ஐபிஎல்லில் தோனி விளையாடுவார்
மகேந்திர சிங் தோனி, வர இருக்கும் 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் தகவலாக அமைந்துள்ளது. அதோடு தோனியின் ஓய்வு தொடர்பான செய்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்திருக்கிறது.
2023 ஐபிஎல் சீசனுக்கு பின்னர் தோனி, ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்துவிட்டு அப்பதவியில் இருந்து விலகினார். அதன்பின் அணியின் ஒரு அங்கமாகவே வகித்து வந்தார். இந்த சூழலில், கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டு தொடரை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது. அப்போது, தோனியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்.
வரலாற்றில் மோசமான சீசன்
அந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது. இது சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் மோசமான சீசனாக மாறியது. இதனால், வரும் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், தோனி 2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது
2026ல் பல்வேறு மாற்றங்கள்
வரும் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள்ன. டிசம்பர் மாதம் நடந்து முடிந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி பல வீரர்களை வாங்கியது. ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்டு சஞ்சு சாம்சன் வாங்கப்பட்டுள்ளார்.
2026 ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.
About the Author
R Balaji