மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு

fமதுரை உத்தங்குடியில் தென் மண்டல வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”வீரம் என்றால் மதுரை. பாசம் என்றால் மதுரை. கோவில் என்றால் மதுரை. சாப்பாடு என்றாலும் மதுரை. இங்கு எல்லாமே ஃபேமஸ் தான். இப்படிப்பட்ட மண்ணில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி மாநாடு நடைபெறுவது பெருமை.

அமைச்சர் மூர்த்திக்கு ஒரு பழக்கம் உண்டு எதையும் சிறிதாகச் செய்ய தெரியாது  எல்லாமே பிரமாண்டம்தான். நாமதான் ஜெயிக்கிறோம் எப்பவுமே நாமதான் ஜெயிக்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது BLA-2 உறுப்பினர்களுக்கான பயிற்சியை மண்டல வாரியாக நானே சென்று நடத்தினேன். அதனால்தான் 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற்றோம்.

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முறையில் ஆப் மூலமாக 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களை இணைத்தோம். எஸ்ஐஆர் வாக்காளார் சிறப்பு சீர்திருத்தின் போது பலரிடm வாக்குகளும் நீக்கப்பட வாய்ப்பு இருந்த நிலையில்  அதை பாதுகாத்தது நமது இயக்கம் தான்.

மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் BLC 75,032 பேர், BDAவில்  5 லட்சத்து 50 ஆயிரம் பேர் என மொத்தம் சுமார் ஏழு லட்சம் பேர். வருகிற தேர்தலில் நமது வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த ஏழு லட்சம் பேர்தான்.

2019 முதல் எல்லா தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றி தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை மக்கள் தந்தார்கள். இப்போது அதைவிட அதிக திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 350 வாக்குகள் இலக்கு. அதை செய்தால் 2 கோடி 50 லட்சம் வாக்குகளை பெற முடியும். இந்த தேர்தலில் 2.5 கோடிக்கு குறையாத வாக்குகளை பெற வேண்டும். அதை வாங்கிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு.

மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின்

அடுத்த இரண்டு மாதம் நமக்கு நோ ரெஸ்ட். ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை நேரில் சந்திக்க வேண்டும். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் எல்லாம் இருக்கட்டும். ஆனால் வீட்டு வாசலில் சென்று கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்பதற்குச் சமம் எதுவும் இல்லை.

வாக்குப்பதிவு முடிந்து சீல் வைத்து எடுத்துச் செல்லும் வரை கவனம். கடைசி வாக்கு எண்ணப்படும் வரை கவனம். தேர்தல் தேதி எப்போது வந்தாலும் பரப்புரை நம்மால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை முடக்க முயன்றதை முறியடித்து முன்கூட்டியே வழங்கினோம். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதை 2000 ஆக கொடுப்போம். மக்களுக்காக கொடுத்தால் அது தமிழக அரசு. மக்களிடமிருந்து எடுத்தால் அது ஒன்றிய அரசு.

எந்த தொகுதியில் யார் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்து கொள்கிறேன். கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன.

மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின்

மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிறார். அவரிடம் மதுரை மெட்ரோ எங்கே?, கோவை மெட்ரோ எங்கே?, தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எங்கே?, கீழடி அறிக்கை ஏன் வெளியிடவில்லை?, நீட் விலக்கு ஏன் தரவில்லை? என மக்கள் நீங்கள் கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனுக்காக கேட்க வேண்டியதை எடப்பாடி கே. பழனிசாமி கேட்கவில்லை. அந்த பயந்தகோலி பழனிசாமி போல இருக்க மாட்டோம், நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தியாவிலேயே அதிக வழக்குகளை சந்தித்து வரும் கட்சி திமுக. மிசா, தடா, எமர்ஜென்சி பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, இ.டி, ஐ.டி எதற்கும் அஞ்ச மாட்டோம்.

மதுரையில் முழங்கிய முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டு மாதங்களில் ஏழு மாநாடுகள். ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன். இப்போது காட்டுவது ட்ரைலர் தான். திருச்சியில் மார்ச் 9ஆம் தேதி பத்து லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடு பார்க்கப் போகிறது. மெயின் பிக்சர் திருச்சியில் உள்ளது.

மக்களிடம் கேளுங்கள்  தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இந்தப் போரில் தமிழ்நாடு வெல்லும். ஒன்றாக இந்தி திணிப்பை எதிர்த்து வெல்வோம். ஒன்றாக மாநில சுயாட்சியை மீட்க வெல்வோம். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக இருக்க வேண்டும்  இது என் வாக்குறுதி” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.