ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து, தற்போது சூப்பர் 8 சுற்றுகள் தொடங்கியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் முதல் நாளான நேற்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட இருந்தன. டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், மழையின் காரணமாக ஒரு பால் கூட போடாமல் இந்த போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதால் அந்த குரூப்பில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Add Zee News as a Preferred Source

தட்டு தடுமாறி வந்த பாகிஸ்தான்
குரூப் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றிருந்தன. இந்திய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. மறுபுறம் பாகிஸ்தான் அணி தட்டு தடுமாறி தான் சூப்பர் ஹிட் சுற்றுக்கு வந்தது. தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு இருக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், பாகிஸ்தான் அணி நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. வாழ்வா சாவா போட்டியில் சாகிப்சாதா ஃபர்ஹான் ஆட்டமிழக்காத சதம் மற்றும் உஸ்மான் தாரிக்கின் அபார பந்துவீச்சு (4 விக்கெட்டுகள்) உதவியால் நமீபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
சூப்பர் 8
சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி குரூப் 2ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ள. நான்கு அணிகளுமே பலம் வாய்ந்ததாக இருப்பதால் ஒவ்வொரு அணிகளுக்கும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக மாறி உள்ளது. பாகிஸ்தான அணி அரையிறுதிக்கு தகுதி பெற குறைந்தது 2 போட்டிகளில் ஆவது வெற்றி பெற்றதாக வேண்டும். முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளிகள் கிடைத்துள்ளதால், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒவ்வொரு அணிகளுக்கும் மூன்று போட்டிகள் சூப்பர் 8 சுற்றில் இருக்கும்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டி ரத்தானதால், அடுத்ததாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் இலங்கையை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் ஐந்து புள்ளிகள் உடன் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம். ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் பாகிஸ்தானிற்கு மூன்று புள்ளிகள் கிடைக்கும். அப்போது மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து தான் இவர்களின் வாய்ப்பு முடிவாகும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் ஒரு புள்ளியுடன் இந்த சுற்றிலேயே வெளியேற வேண்டும்.
மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?
ஒருவேளை பாகிஸ்தான் அணி தனது குரூப் 2 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினால், மீண்டும் ஒருமுறை இந்தியாவுடன் அரையிறுதியிலோ அல்லது இறுதி போட்டியிலோ மோதுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். மொத்தத்தில், பாகிஸ்தான் அணிக்கு சூப்பர் 8 சுற்று ஒரு அக்னிப் பரீட்சையாகவே இருக்கப் போகிறது.
About the Author
RK Spark