மிதி வாங்கிய இந்திய அணி… படுகுழியில் நெட் ரன்ரேட் – செமி பைனலுக்கு போகுமா?

ICC T20 World Cup 2026, India vs South Africa Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்திய அணி செமி பைனலுக்கு போகும் வாய்ப்பு கடினமாகி உள்ளது.

Add Zee News as a Preferred Source

South Africa win by 76 runs in Ahmedabad. #TeamIndia set their sights on a turnaround in the next game.

https://t.co/ZE8J4fF18z#T20WorldCup | #MenInBlue | #INDvSA pic.twitter.com/xBIBwjEEmF

— BCCI (@BCCI) February 22, 2026

பும்ரா – அர்ஷ்தீப் மிரட்டல் பந்துவீச்சு

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா நான்கு மாற்றங்களை செய்த நிலையில், இந்திய அணி எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அதன்படி, இந்திய அணி சிறப்பாக பந்துவீசியது. தென்னாப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது. டி காக் மற்றும் ரிக்கல்டன் விக்கெட்டை பும்ராவும், மார்க்ரம் விக்கெட்டை பவர்பிளேவில் எடுத்தனர். இருப்பினும், பவர்பிளேவின் கடைசி இரண்டு ஓவர்களில் மில்லர் – பிரெவிஸ் ஜோடி ஓரளவு ரன்களை அடித்தது. பவர்பிளே முடிவில் ஸ்கோர் 41/3 என இருந்தது. 

ஆட்டத்தை மாற்றி மில்லர் – பிரெவிஸ் ஜோடி

மில்லர் – பிரெவிஸ் ஜோடி தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை மேற்கொண்டனர். இன்று வருண் சக்ரவர்த்தியையும் இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. மில்லர் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 97 ரன்களை சேர்த்த நிலையில், 12.2 ஓவரில் சிவம் தூபேவிடம் பிரெவிஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டப்ஸ் களமிறங்க, மில்லர் மிரட்டினார். அவர் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உடன் 63 ரன்களை குவித்தார். அப்போது தென்னாப்பிரிக்கா 152/5 என்ற நிலையில் இருந்தது. பும்ராவும், அர்ஷ்தீப் சிங்கும் அடுத்த மூன்று ஓவர்களை சிறப்பாக வீசினர். 19 ஓவர்களில் 167/7 என்ற நிலையிலேயே இருந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி 20வது ஓவரில் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்களை குவித்து மிரட்டினார்.

188 ரன்கள் இலக்கு

இதனால், தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 187/7 ஆக இருந்தது. ஸ்டப்ஸ் 44(24) ரன்களை குவித்து அருமையான பினிஷிங்கை கொடுத்தார். பும்ரா 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட், வருண் மற்றும் சிவம் தூபே தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இதனால், 188 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி துரத்தியது. இதுவரை ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்திய அணி 173 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக சேஸிங் செய்தது கிடையாது. இன்றைய போட்டியிலும் இந்த துரதிருஷ்டம் இந்திய அணியை தொடர்ந்தது.

சொதப்பிய இந்திய பேட்டிங் 

இந்திய அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் ஓவரை ஆப் ஸ்பின்னரான எய்டன் மார்க்ரம் வீசினார். அபிஷேக் சர்மாவுக்கு விரித்த வலையில் இம்முறை இஷான் கிஷன் வீழ்ந்து, டக்அவுட்டானார். திலக் வர்மா 4 ரன்களிலும், அபிஷேக் சர்மா 14 ரன்களிலும் மார்கோ யான்சனின் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்ந்தனர். பவர்பிளேவில் இந்திய அணியின் ஸ்கோர் 31/3 ஆக இருந்தது. தென்னாப்பிரிக்காவும் தொடக்கத்தில் சொதப்பினாலும், மிடில் ஓவரில் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு அமையவில்லை.

ஆட்டநாயகன் மில்லர்

நம்பர் 5 பேட்டராக வந்த வாஷிங்டன் 11, சூர்யகுமார் யாதவ் 18 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சற்று நேரம் தாக்குபிடித்த ஹர்திக் பாண்டியா 15வது ஓவரில் கேசவ் மகாராஜிடம் ஆட்டமிழந்தார். அவர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார், அதே ஓவரில் ரிங்கு சிங் டக்அவுட்டானார். தூபே மட்டுமே ஒருமுனையில் தாக்குபிடித்தார். அர்ஷ்தீப் 1 ரன்னில் ஆட்டமிழக்க, சில சிக்ஸர்களை பறக்கவிட்ட தூபே 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 42 ரன்களை சேர்த்திருந்தார். அதற்கடுத்த பந்தில் பும்ராவும் ஆட்டமிழக்க இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் தரப்பில் மார்கோ யான்சன் 4, கேசவ் மகாராஷ் 3, கார்பின் பாஷ் 2, மார்க்ரம் 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக டேவிட் மில்லர் தேர்வு செய்யப்பட்டார். 

படுகுழியில் இந்திய அணியின் நெட் ரன்ரேட்

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் 2 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது, அதன் நெட் ரன்ரேட் +3.800 ஆக உள்ளது. இந்திய அணியின் நெட் ரன்ரேட் -3.800 ஆக உள்ளது. நாளை மேற்கு இந்திய தீவுகள் – ஜிம்பாப்வே அணிகள் மோதின. நாளை வெற்றிபெறும் அணி 2வது இடத்தை பிடிக்கும். இந்திய அணி அடுத்து பிப். 26ஆம் தேதி சென்னையில் ஜிம்பாப்வே அணியையும், மார்ச் 1ஆம் தேதி கொல்கத்தாவில் மேற்கு இந்திய தீவுகள் அணியையும் சந்திக்கிறது. இரண்டிலும் வென்று, அதிக நெட் ரன்ரேட் வைத்திருந்தால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற முடியும். 

மேலும் படிக்க |  இங்கிலாந்து மிரட்டல் வெற்றி… இடிந்து போன இலங்கை அணி – செமி பைனலுக்கு வாய்ப்பில்லை ராஜா!

மேலும் படிக்க | ஓய்வு பெறும் எம்.எஸ். தோனி? CSK அதிகாரி கொடுத்த முக்கிய தகவல்!

மேலும் படிக்க | பாபர் அசாமுக்கு டி20 கிரிக்கெட் ஏற்றதல்ல.. ஸ்ட்ரைக் ரேட் வெறும் 115 தான் – முழு விவரம்

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.