IND VS SA Super 8: டாஸில் இந்தியா தோல்வி.. துணை கேப்டன் நீக்கம்! பிளேயிங் 11ல் மாற்றம்!

Ind vs Sa Super 8 Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடர் சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 22) இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இப்போட்டிக்கான டாஸ் சரியாக 6.30 மணி அளவில் வீசப்பட்டது. இதனை வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது. 

Add Zee News as a Preferred Source

தென்னாப்பிரிக்கா அணியில் 4 மாற்றங்கள் 

இப்போட்டியில் இரு பெரிய அணிகள் மோதுவதாலும், வெல்லும் அணி அரையிறுதி போட்டிக்கு எளிதாக செல்லும் வாய்ப்பை பெறும் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில் அவர்கள் 4 மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது, கடந்த போட்டியில் டேவிட் மில்லர், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ் மற்றும் லுங்கி நெகிடி ஆகியோர் விளையாடாத நிலையில், இப்போட்டியில் அவர்கள் விளையாட உள்ளனர். 

துணை கேப்டன் அக்சர் படேல் நீக்கம்

அதேசமயம் இந்திய அணியை பொறுத்தவரையில் பிளேயிங் 11ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. துணை கேப்டன் அக்சர் படேல் நெதர்லாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாடவில்லை. இப்போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அணிக்குள் கொண்டு வரப்படவில்லை. அவரது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் தொடருவார் என சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்தியா பிளேயிங் 11

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி. 

தென்னாப்பிரிக்கா பிளேயிங் 11

ஐடன் மார்க்ராம் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரியான் ரிக்கல்டன், டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி. 

சூப்பர் 8 சுற்றில் இதுவரை 

நேற்று முதல் சூப்பர் 8 சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியாக நடைபெற இருந்த பாகிஸ்தான் – நியூசிலாந்து சூப்பர் 8 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், இன்று மதியம், சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியாக இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.