இந்தியா அடுத்த 2 போட்டிகளில் ஜெயித்தாலும் Semi-Final போக முடியாது?

2026 டி20 உலக கோப்பை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ளது. முதல் சூப்பர் 8 போட்டி மழையின் காரணமாக ரத்தான நிலையில், நேற்று மதியம் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக வெற்றி பெற்றது. மறுபுறம் மாலை நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாடி 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. டி20 உலக கோப்பையை நடத்தும் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தங்களது முதல் சூப்பர் 8 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு பறிபோனதா என்று பலரும் யோசிக்கின்றனர். அதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

South Africa win by 76 runs in Ahmedabad. #TeamIndia set their sights on a turnaround in the next game.

Scorecard https://t.co/ZE8J4fF18z#T20WorldCup | #MenInBlue | #INDvSA pic.twitter.com/xBIBwjEEmF

— BCCI (@BCCI) February 22, 2026

சூப்பர் 8 போட்டி 

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 187 ரன்கள் அடித்தது. பின்பு பேட்டிங் ஆடிய இந்திய அணி 111  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணியின் ரன் ரேட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சூப்பர் 8 போட்டியில் உள்ள இரண்டு குழுக்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறு.ம் இந்திய அணி உள்ள குரூப்பில் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாவே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடம் பெற்றுள்ளது. 

அரை இறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

தென்னாபிரிக்கா அணியிடம் தோல்விக்கு பிறகு, இந்தியா அணியின் நெட் ரன் ரேட் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்து நடைபெறும் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமான ஒன்று. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மேலும் அடுத்ததாக மார்ச் ஒன்றாம் தேதி நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றதாக வேண்டும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக படுதோல்வி அடைந்ததால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் நெட் ரன் ரேட்டை மனதில் வைத்து ஆட வேண்டும். ஜிம்பாவே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு அணிக்கு எதிராக சாதாரணமாக வெற்றி பெறாமல், பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நெட் ரன் ரேட் என்ற பிரச்சனை இருக்காது.

ஜிம்பாவே மற்றும் மேற்கிந்திய தீவுகள்!

ஜிம்பாவே அணியை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்தாலும், இதுவரை அந்த அணி தோல்வியை சந்திக்காமல் வந்துள்ளது. எனவே சென்னை போன்ற மைதானங்களில் அவர்களை எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. மறுபுறம் மேற்கிந்திய தீவுகள் இந்த முறை மிகவும் பலம் வாய்ந்ததாக மாறி உள்ளது. எனவே இது இந்திய அணிக்கு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி இந்தியாவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்தியாவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். ஒருவேளை தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவிற்கு சற்று சாதகமான முடிவை தரும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.