`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! – ராதிகா எமோஷனல்

`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா… “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம்ப வருஷங்களா தெரியும். அதில் கொஞ்சம் எங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மிக்ஸ் பண்ணினேன். தெனாவட்டாகப் பேசுவது, அலட்சியமாகக் கிண்டல் அடிப்பது என்று அவரையும் கொண்டுவந்து உள்ளே வச்சிருக்கேன்.” என்று பேசியிருந்தார்.

mr radha & radhika
mr radha & radhika

ராதிகாவும் தந்தை எம்.ஆர்.ராதா போலத்தான். மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லுவார். எதற்கும் பயப்படமாட்டார். தமிழ்த் திரையுலகில் எம்.ஆர்.ராதா என்ற பெயருக்குப் பின்னால் ஒரு மாபெரும் ஆளுமையும், அஞ்சாத துணிச்சலும் ஒளிந்திருக்கிறது. அதே நெருப்பைத் தன்னுள் ஏந்தி, இன்று வரை ஒரு `சிங்கப் பெண்ணாக’ வலம் வருபவர் ராதிகா.

மேடை நாடகமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதற்கும் அஞ்சாதவர் எம்.ஆர்.ராதா. சமூக அவலங்களை முகத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டிய `கலகக்காரர்’. ராதிகாவும் அப்படியே. அரசியல் மேடைகளாகட்டும் அல்லது சினிமா சங்க விவகாரங்களாகட்டும், எதற்கும் பயப்படாமல் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

எம்.ஆர்.ராதா வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர். பகுத்தறிவுப் பாதையில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர். அதேபோல், ராதிகா ஒரு சிறந்த தொழில்முனைவோர் (Entrepreneur). சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது முடங்கிப் போய்விடாமல், சின்னத்திரையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். சந்தை எதை எதிர்பார்க்கிறது, காலத்திற்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த சமயோஜிதம் இருவருக்கும் பொதுவானது.

Radhika
Radhika – A Reporter’s Diary

நடிப்பைப் பொறுத்தவரை இருவரும் இயல்பான கலைஞர்கள். எம்.ஆர்.ராதா வில்லத்தனத்திலும் நையாண்டி, தனித்துவமான குரல் வளம், உடல் மொழி மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்துவார். ராதிகா, எமோஷனல் அல்லது அதட்டலான காட்சிகளாகட்டும், அதில் எதார்த்தம் இருக்கும். `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தொடங்கிய அந்தத் துடிப்பு, இன்று வரை அவரிடம் குறையவே இல்லை.

எம்.ஆர்.ராதா ஒரு சகாப்தம் என்றால், அந்தச் சகாப்தத்தின் நீட்சிதான் ராதிகா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.