சமீபத்தில் நடந்து முடிந்த 2026ம் ஆண்டுக்கான ஐசிசி U19 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான். இந்நிலையில் இதற்காக அவரை பாராட்டும் விதமாக, பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ரூ. 50 லட்சம் வழங்கி கவுரவித்துள்ளார். பிஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது உலக கிரிக்கெட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
#SportsUpdate | பரிசு!#ZeeTamilNews | #VaibhavSooryavanshi | #U19WC pic.twitter.com/LG7zW1MeC3
— Zee Tamil News (@ZeeTamilNews) February 23, 2026
இறுதிப்போட்டியில் அசத்தல்!
பிப்ரவரி 6ம் தேதி நடைபெற்ற U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார். மேலும் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார் வைபவ். ஐபிஎல்லில் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, தனது முதல் சீசனிலேயே சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையையும் படைத்துள்ளார்.
ரூ. 50 லட்சம் பரிசு
ஐபிஎல் மட்டும் இன்றி, உள்ளூர் போட்டி, உலக கோப்பை என்ற தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. இந்நிலையில் அவரின் இந்த சாதனைகளை பாராட்டும் விதமாக, பிஹார் மாநில அரசு பசுபதிநாத் யோஜனா திட்டத்தின் கீழ் அவருக்கு ரூ. 50 லட்சம் ரொக்க பரிசை அறிவித்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர், ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில், முதலமைச்சர் நிதிஷ் குமார் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ. 50 லட்சத்துக்கான காசோலையையும், சால்வையையும் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த விழாவில் பேசிய பீகார் முதலமைச்சர், “தனது கடின உழைப்பாலும், திறமையாலும் இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளார். U19 உலக கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. எதிர்காலத்தில் அவர் தேசிய அணிக்காக விளையாடி, புதிய சாதனைகளை படைத்து பிஹாருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.
டாடா நிறுவனத்தின் கார் பரிசு
முதலமைச்சரின் இந்த பரிசை தொடர்ந்து, வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னொரு சர்ப்ரைஸ் பரிசும் காத்திருந்தது. அவரின் சமீபத்திய சிறப்பான ஆட்டத்திற்காக டாட்டா மோட்டார்ஸ் சார்பில் அவருக்கு டாட்டா கர்வ் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தந்தையுடன் சென்று இந்த காரை பெற்றுக்கொண்ட வைபவ், “இது வெறும் பரிசு மட்டுமல்ல, எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கான உந்துதல். எனது வெற்றிக்கு காரணமான பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
About the Author
RK Spark