IND vs SA: அக்சர் படேல் என்ன தவறு செய்தார்.. ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கம்!

Main Reason For India Defeat Against South Africa: நேற்று (பிப்ரவரி 22) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி மோதி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் துணை கேப்டனை பிளேயிங் 11ல் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தரை எடுத்ததுதான் என பலரும் பேசி வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

அதாவது, தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், ரியான் ரிக்கில்டன், டேவிட் மில்லர் என இடது கை பேட்டர்கள் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி எடுத்து சென்றது. ஆனால் இந்த உக்தி களத்தில் சுத்தமாக எடுபடவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஓவர்களை வீசுவதற்கு முன்பாகவே டி காக் மற்றும் ரியான் ரிக்கில்டன் ஆட்டமிழந்தனர். அதன்பின் இரண்டு ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 17 ரன்களை விட்டு கொடுத்தார். 
ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து 

அதேசமயம் பேட்டிங்கில் சிவம் துபே, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு முன்பாக 5வது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். அங்கும் பெரிதாக எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை. அவ்ர் வெறும் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதுவே ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் மத்தியில் விவாதமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், அக்சர் படேலை பிளேயிங் 11ல் எடுத்து செல்லாதது சரியான மூவ் இல்லை என அஸ்வின் கூறியுள்ளார். 

ஐசிசி தொடரில் அணி வீரர்களை அடிக்கடி மாற்றுவது சரியாக இருக்காது 

இது தொடர்பாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் அதாவது 14 லீக் போட்டிகள் கொண்ட தொடரில் பிளேயிங் லெவனை அடிக்கடி மாற்றுவது சரியாக இருக்கும். ஆனால் ஐசிசி போன்ற தொடர்களில் அடிக்கடி அணி வீரர்களை மாற்றுவது சரியானதாக இருக்காது. இது போன்ற தொடர்களில் அணியில் நிலை தன்மை தேவை. 

அக்சர் படேலின் பங்களிப்பை மறந்து விட முடியாது 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் இடது கை பேட்டர்களுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்த நினைத்ததை நான் 100 சதவீதம் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் முக்கிய வீரரான அக்சர் படேலை பிளேயிங் 11ல் எடுக்காமல் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இதுவரை இந்தியாவுக்காக அளித்த பங்களிப்பை நம்மால் மறந்துவிட முடியாது. 

இக்கட்டான சூழ்நிலையில் அக்சர் படேல் 

கடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியில் விராட் கோலியுடன் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை 170 ரன்களை கடக்க உதவினார். நேற்றைய போட்டியில் மிடில் ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்ப்பது முக்கியமானதாக இருந்தது. அங்கு ஒரு நிலைத்தன்மை இருந்திருந்தால் இந்தியா வெற்றி இலக்கை நோக்கி சென்றிருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். 

அக்சர் படேல் இந்தியாவுக்காக இதுவரை 86 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 83 விக்கெட்களை வீழ்த்தி 686 ரன்களையும் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.