நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருக்கும் பொக்காபுர மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் வருகை தருகின்றனர்.

நான்கு நாட்களாக நடைபெறும் திருவிழாவில், முதல்நாள் நிகழ்வாக அதிகாலை 5 மணிக்கு காப்புக்கட்டுகிறார்கள். காப்புக் கட்டின் போது பொக்காபுர மாரியம்மனை குளத்திற்கு எடுத்துச் சென்று, அம்மனை நீராட வைத்து, அலங்காரம் செய்து கோவிலுக்கு எடுத்து வந்து வழிபடுகின்றனர்.

இதில் பொக்காபுர மாரியம்மன் திருவிழாவினை நடத்தும் பழங்குடியின மக்கள் தவிர மற்றொரு பழங்குடியின மக்கள் காம்பெட்ரா ஐயன் ஆலையத்திலிருந்து வந்து பூஜை செய்து அம்மனை பெட்டியில் வைத்து குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.

அதன்பின் திருவிழா நடத்தும் பழங்குடியின சமூகத்தினர் வாயில் வேப்பிலையை வைத்து பெட்டியில் இருக்கும் அம்மனை குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் காட்டுப்பாதையின் வழி குளத்திற்கு அம்மனை எடுத்துச் செல்லும் போது அவர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற ஆடைகளை அணிந்து பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து பாட்டுப்பாடிக்கொண்டே அம்மனை குளத்திற்கு எடுத்து சென்றனர்.

அங்கு அம்மனை நீராட்டிவிட்டு அம்மனுடைய ஆலையத்திற்கு கொண்டு சென்று பூஜை செய்தனர். பொக்காபுர அம்மனை தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் வந்து மக்கள் வழிபடுகின்றனர். இங்கு பக்தர்கள் கோவிலுக்கு வேண்டுதலாக கோவிலைச் சுற்றி குட்டி குட்டி கல்லில் அம்மனை ஜோடித்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாவிற்கு கடைகள் போட்டிருக்கும் வியாபாரிகள் ‘ பொக்காபுர அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். அம்மனிடம் எது வேண்டிக்கொண்டாலும் நிச்சயம் நடக்கும் என்றார்கள். கோவிலைச் சுற்றுலும் காடுகளாகத்தான் இருக்கிறது. இங்கு அதிகமாக கரடி, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்தாலும் பொக்காபுர திருவிழாவின் போது கோவிலுக்கு காப்பு கட்டிவிட்டால் எந்த விலங்கும் எங்களை தொந்தரவு செய்யாது. திருவிழா முடியும் வரை நாங்கள் இங்கே தான் தங்கியிருப்போம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.