Samantha: "அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்" – மனம் திறந்த நடிகை சமந்தா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு ‘தி ஃபேமிலி மேன் 2’ படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது.

இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன்.

இந்த நிலையில்தான், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமோருவைச் சந்தித்தேன். அவர் என் வாழ்க்கையில் இருப்பதால், நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்.

சமந்தா
சமந்தா

அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் இந்த உறவின் காரணமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மறையான மாற்றத்தை எனது நெருங்கிய தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டார்கள்” என்றார்.

தற்போது சமந்தா நடித்து வரும் ‘மா இன்டி பங்காரம்’ (Ma Inti Bangaram) திரைப்படத்திற்கு ராஜ் நிதிமோரு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.