சென்னை: நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் ரூ.117.65 கோடியில் மினி டைடல் பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த நியோ டைடல் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் கங்காபுரம் கிராமத்தில் ரூ.39.87 கோடியில் நியோ டைடல் […]