புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது | Automobile Tamilan

இந்தியாவின் துவக்கநிலை ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் பைக் மாடல்களில் பிரசத்தி பெற்ற யமஹாவின் R15க்கு சவால் விடுக்கின்ற கேடிஎம் நிறுவன RC 160 பைக்கில் கூடுதலாக மேட் அடிப்படையில் எலக்ட்ரிக் ஆரஞ்ச் மற்றும் செராமிக் வெள்ளை என இரு நிறங்களை கொண்டு வந்துள்ளது.

நிறங்களை தவிர எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆர்சி 160 மாடலில் 64.2cc லி்க்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு பவர் 19PS ஆனது 9500 rpm-ல் மற்றும் டார்க் 15.5 Nm ஆனது 7500 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

மற்றபடி தொடர்ந்து LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் மட்டுமே பெற்றுள்ளது, ஆனால் 160 டியூக் சமீபத்தில் TFT திரையுடன் புதுப்பிக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் RCக்கு ஆப்ஷனலாக அறிவிக்கப்படவில்லை.

ரூ.1.85 லட்சத்தில், RC 160 பைக்கின் விலை 160 டியூக்கை விட ரூ.15,000 அதிகமாகவும், அதன் நேரடி போட்டியாளரான  R15 விலை வெறும் ரூ.1.66 லட்சம் மட்டுமே,  கிட்டத்தட்ட ரூ.19,000 அதிகமாகவும் உள்ளது.

ktm rc 160 new white

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.