சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 27 ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.4,813.92 கோடியில் கட்டப்பட்ட 13 சாலைகள் மற்றும் ஒரு பாலம் மற்றும் ரூ1,970.57 கோடியில் அமைக்கப்பட்ட 38 துணை மின் நிலையங்கள் திறந்து வைத்தார். புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார். உடன் அமைச்சர் சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். […]