கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு| Dinamalar

வாஷிங்டன்-கொரோனா கட்டுப்பாடு கள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க லாரி டிரைவர்கள் வாஷிங்டன் சாலையில் பேரணி நடத்தி வருவதை அடுத்து, போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக வட அமெரிக்க நாடான கனடாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த லாரி டிரைவர்களும், தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் வாஷிங்டன் டி.சி.,யை நோக்கி லாரியில் பேரணி நடத்தி வருகின்றனர்.

நுாற்றுக்கணக்கான லாரிகள் வாஷிங்டனை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் வாஷிங்டன் நகரை அடைந்ததும் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.