விக்ரம் நல்ல நடிகர்லாம் கிடையாது: பிரபல இயக்குனரின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்
விக்ரம்
. இவர் முதன்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த ‘
மகான்
‘ படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் குறித்து இயக்குனரும், தேவையனியின் கணவருமான ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. யூடிப்பில் பிரபலமான
சாய் வித் சித்ரா
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜகுமாரன், தனது திரையுலக பயணம் குறித்து பல முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் நடிகர் விக்ரம் பற்றி பேசும் போது,
விண்ணுக்கும் மண்ணுக்கும்
படப்பிடிப்பில் எனக்கும் விக்ரமுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. எனக்கும் சரத் கம்பெனிக்கும் தான் பிரச்சனை. ஆனால், விக்ரம் நடிக்க அதிக நாட்கள் கொடுத்ததினால் அவர் சம்பளம் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கொடுக்கவில்லை. மத்தபடி எனக்கும் விக்ரமுக்கும் இருந்து பிரச்சனையும் இல்லை.

தனுஷ் படத்தை திரையிட மறுத்தாங்க: கஸ்தூரி ராஜா கூறிய பகீர் தகவல்..!

ஆனால், இந்த படத்தைப்பற்றி விக்ரம் ‘i hate this flim’ என்று ஏதோ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அது ஏன் என்று தெரியவில்லை. விக்ரமுக்கு சேது படம் திருப்பு முனையாக அமைந்தாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான் அமைந்தது. விக்ரமை ஒரு நடிகனாக சேது காண்பித்து இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் விக்ரமை கொண்டு போய் சேர்த்தது விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான்.

சேது படத்தை ரசிகர்கள் பத்திரிக்கை நிறுவனங்கள் பார்ப்பார்களே தவிர விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் குடும்பத்தோடு பார்த்த படம். என்னை பொறுத்தவரை நடிப்பதென்றால் கையை உடைத்து, காலை உடைத்து, கண்ணை மாற்றி பார்த்து நடிப்பது நடிப்பு கிடையாது. விக்ரம் நல்ல நடிகர் எல்லாம் கிடையாது. ஒன்னு ரஜினி மாதிரி நடிப்பாரு இல்லன்னா கமல் மாதிரி நடிப்பாரு அவ்வளவுதான். இவ்வாறு விக்ரம் குறித்து ராஜகுமாரன் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எதற்கும் துணிந்தவன்” சூர்யா ரசிகர்களின் ரியாக்சன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.