கொரோனா அச்சம்.. டெஸ்லா தொழிற்சாலை மூடல்.. எலான் மஸ்க் கவலை..!

உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனாவில் சுமார் 18 மாகாணத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து மக்களும், வர்த்தகமும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

சமீபத்தில் இந்திய அரசு உள்நாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாட்டு விமானச் சேவையை அளிக்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!

சீனாவில் கொரோனா தொற்றுக் காரணமாக டெஸ்லா தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது.

டெஸ்லா

டெஸ்லா

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அமெரிக்காவைத் தாண்டி மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலைகளைச் சீனா மற்றும் ஐரோப்பாவில் வைத்துள்ளது. டெஸ்லா-வுக்கு இணையான வர்த்தகம் சீனாவில் இருக்கும் காரணத்தால் சீனாவின் ஷாங்காய்-யில் தொழிற்சாலையை அமைத்தது.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்நிலையில் சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் காரணத்தால், ஷாங்காயில் இருக்கும் டெஸ்லா தொழிற்சாலை 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பைத் தொழிற்சாலை நிர்வாகம் சப்ளையர்கள், சப்ளை செயின் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

 2 நாள் தொழிற்சாலை மூடல்
 

2 நாள் தொழிற்சாலை மூடல்

சீனாவில் டெஸ்லா கார்களுக்கு டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஷாங்காங் 24 மணிநேரமும் இயங்கும் தொழிற்சாலையாக விளங்குகிறது. இதனால் இத்தொழிற்சாலையில் ஊழியர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம், இதனால் கொரோனா தொற்று பரவ அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் 2 நாள் தொழிற்சாலை மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 ஜிகாபேக்டரி 3

ஜிகாபேக்டரி 3

ஜிகாபேக்டரி 3 எனச் செல்லமாக அழைக்கப்படும் ஷாங்காய் தொழிற்சாலையில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்போது சீன அரசு ஷாங்காங் பகுதியில் மக்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யத் துவங்கியுள்ளது.

 ஜெர்மனி மற்றும் ஜப்பான்

ஜெர்மனி மற்றும் ஜப்பான்

சீனா தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்கள் சீன வர்த்தகச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதம் மட்டும் ஷாங்காய் தொழிற்சாலையில் சுமார் 56,515 வாகனங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது, இதில் 33,315 கார்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla shuts Shanghai factory AKA Gigafactory 3 for two days amid covid spread

Tesla shuts Shanghai factory AKA Gigafactory 3 for two days amid covid spread கொரோனா அச்சம்.. டெஸ்லா தொழிற்சாலை மூடல்.. எலான் மஸ்க் கவலை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.