பெங்களூரு : கடவுள் பெயரை சொல்லி மிரட்டி நகைகளை பறித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.7 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.பெங்களூரு ஹலசூரை சேர்ந்தவர் பிரபுராம், 45 என்பவர், கடந்த மாதம் 12ல் மூன்று பேர் நகைகளை பறித்து சென்றதாக போலீசில் புகார் செய்திருந்தார்.
ஹலசூரு போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் நாக்பூரை சேர்ந்த ராஜா அலி, 35, சாதிக், 36, ஜைபி, 40 என்பது தெரியவந்தது.இவர்களில், ஒருவர், யாரையாவது குறி வைத்து அவர்களிடம் கடவுள் பெயரை சொல்லி ஆன்மிக பேச்சை ஆரம்பிப்பர். பேசி கொண்டிருக்கும் போதே இரண்டு பேர் வந்து மிரட்டி நகைகளை பறித்து செல்வர். அதுபோல, பிரபு ராமிடம் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது.இவர்கள் மீது நாக்பூர், ராஜஸ்தான், ஆக்ரா போன்ற பல்வேறு பகுதிகளில் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளது.இவர்களிடமிருந்து 1.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு : கடவுள் பெயரை சொல்லி மிரட்டி நகைகளை பறித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.7 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.பெங்களூரு ஹலசூரை சேர்ந்தவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.