பெண்களே இனி நாப்கின்ஸ் வேண்டாம்; மென்சுரல் கப் போதும்… இப்படி பயன்படுத்துங்க


பொதுவாக மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை அப்புறப்படுத்த ஆரம்ப காலங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர்.

அதன் பின் காட்டன் பஞ்சுகள் நிரப்பப்பட்ட நாப்கின்கள் புழக்கத்துக்கு வந்தன.

துணி மற்றும் நாப்கின் நம்முடைய உடல் உறுப்பின் வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தக்கூடியவை.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பலரும் மென்சுரல் கப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

இது பெண்களின் பிறப்புறப்பின் உள்ளே வைத்துப் பயன்படுத்தக்கூடியது. கூம்பு வடிவத்தில், சிலிகான் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதை, மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளலாம். 

அந்தவகையில் தற்போது மென்சுரல் கப்பை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

நாப்கின் Vs மென்சுரல் கப்

  • நாப்கின்களை பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்த வேண்டும், ஆனால் மென்சுரல் கப்பை பலமுறை பயன்படுத்தலாம். நாப்கினால் சுற்றுச்சூழல் மாசடைய வாய்ப்புள்ளது ஆனால் மென்சுரல் கப்பால் சுகாதார கேடு ஏற்படாது.

      

  • நாப்கினின் விலையோடு மென்சுரல் கப் விலை அதிகமாக இருந்தாலும், இதனை கிட்டதட்ட 8 ஆண்டுகள் வரை உபயோகிக்கலாம்.

மென்சுரல் கப்பை பயன்படுத்துவது எப்படி?

ஆழமாக சுவாசித்து, உடலை தளர்த்திக் கொண்டு பெண்ணுறுப்பின் வழியே மென்சுரல் கப்பின் மேற்பரப்பை ‘C’ வடிவத்தில் உள்ளே செருகினால், அது தானாக ஒரு கப் போல விரிந்துக் கொள்ளும்.

கப் இறுக்கமாக பொருந்தியுள்ளதை சரிபார்க்க, உங்கள் விரல்களைக் கொண்டு துழாவி, லேசாக சுழற்றிப் பார்க்கலாம்.

உதிரப்போக்கின் அளவை பொறுத்து 4 முதல் 12 மணி நேரத்திற்குள் கப்பை கழுவிவிட்டு பயன்படுத்தவும்.

கப்பினை வெளியே எடுக்க, கப்பின் அடிப்பகுதியை லெசாக அழுத்தி, கொஞ்சம் நகர்த்தி நகர்த்தி வெளியே இழுக்கவும். சேரும் உதிரத்தை டாய்லட்டில் அப்புறப்படுத்திவிட்டு சுடு நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். இது போல 7-8 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

  

 பக்க விளைவுகள் உண்டா?

திருமணமான பெண்களுக்கு அதாவது ஏற்கனவே உடலுறவில் ஈடுபட்ட பெண்கள் மட்டுமே இதனை கவனமாக உபயோகிக்க வேண்டும்.

ஏனெனில், பெண்ணுறுப்புக்குள் கப்பைச் செருகும்போது கன்னித்தன்மைக்கான அடையாளமாகக் கருதப்படும் கன்னித்திரை எனும் சவ்வு கிழிய வாய்ப்புள்ளது. ஆகையால் இளம்பெண்கள் சிலரால் பயன்படுத்த முடியாமல் போகலாம்.  

யாரொல்லாம் பயன்படுத்த கூடாது?

சிலிக்கான் அலர்ஜி இருப்பவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம். முதன்முறையாக பயன்படுத்தும்போது மருத்துவரை அனுகிவிட்டு உபயோகிப்பது நல்லது.  

குறிப்பு

ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், உங்கள் கப்பை வேறு யாரும் பயன்படுத்தக் கொடுக்கக்கூடாது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.