S Janaki Birthday ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ எஸ் ஜானகி பிறந்தநாள் ஸ்பெஷல்!

‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜானகியம்மா, இந்தியாவின் மூத்த பாடகிகளில் ஒருவர். ஆந்திராவில் பிறந்த எஸ்.ஜானகி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தனது மந்திர குரலால் ஏராளமான பாடல்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

இவர் 25 மொழிகளில் 48,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல்வேறு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடனான எஸ் ஜானகியின் கூட்டணி ரசிகர்களால் போற்றப்பட்டது, இருவரும் பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளனர்.

ஜானகி தெலுங்கு சினிமா துறையில் பின்னணி பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் 1957 இல் ‘கொஞ்சும் சலங்கை’ படத்திற்காக’ தனது முதல் பாடலான ‘சிங்காரவேலனே தேவா’ பாடலை பாடினார்.

இந்திய மொழிகளைத் தவிர, ஜானகி’ ஜெர்மன், ஜப்பானிய, ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் தனது பாடல்களுக்காக பல சிறந்த விருதுகளையும் வென்றுள்ளார். ஆனால் 2013 ஆம் ஆண்டில், ஜானகி பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்தார், தனது சாதனைக்கு அது மிகவும் தாமதமாக வந்ததாகக் கூறினார்.

இன்று, மரியாதைக்குரிய ஜானகியம்மா தனது 84 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நேரத்தில், அவர் பாடிய ஐந்து எவர்கிரீன் தமிழ் பாடல்களைப் பார்ப்போம்.

மச்சான பாத்தீங்களா

சிவகுமார் நடித்த ‘அன்னகிளி’ படத்தின் மச்சானா பாத்தீங்களா ஒரு கிராமத்து பின்னணி பாடல், இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார், பஞ்சு அருணாசலம் வரிகளை எழுதியுள்ளார். எஸ் ஜானகியின் மாயாஜாலக் குரல் உங்களை கிராமத்தின் அந்த நாட்களுக்கு கடத்தி சென்றுவிடும்.

சின்னத்தாய் அவள்

ரஜினிகாந்தின் ‘தளபதி’ படத்தின் ’சின்னத்தாய் அவள்’ தமிழில் பிரபலமான பாடல்களில் ஒன்று, இந்த பாடல் முழுவதும் தாய் அன்பைப் பற்றியது. எஸ் ஜான்கியின் ஆத்மார்த்தமான குரல் இந்த பாடலை மேலும் இனிமையாக்கியது, இந்த பாடலையும் இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இளையராஜாவுடன் எஸ் ஜானகியின் கூட்டணி எப்போதும் ரசிகர்களின் விருப்பமாக இருந்தது, அவர்களின் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்.

நான் ஆளான தாமரை

1988 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இது நம்ம ஆளு’ படத்தில்’ நான் ஆளான தாமரை எஸ் ஜானகி பாடியிருந்தார், இந்த பாடலை படத்தின் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இசை அமைத்தார். எஸ் ஜானகியின் எக்ஸ்பிரசிவான குரல் இந்த பாடலை சூப்பர்ஹிட் ஆக்கியது, மீண்டும் கேட்க வேண்டிய எஸ் ஜானகி கிளாசிக் வெர்ஷனில் இதுவும் ஒன்று.

காதல் கடிதம் கேட்கவே

பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த ‘ஜோடி’ படத்தின் காதல் கடிதம் கேட்கவே’ பாடல் ஒரு காதல் மெலடி, உன்னி மேனனுடன் இணைந்து’ எஸ் ஜானகி இந்த பாடலை பாடினார். வைரமுத்து, வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இது ஒரு சூப்பர் ஹிட் மெலடி பாடல், இந்தப் பாடலை நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள்.

என் கண்ணுக்கொரு நிலவா

என் கண்ணுக்கொரு நிலவா’ பாக்யராஜ் மற்றும் பானுப்ரியா நடித்த ‘ஆராரோ ஆரிராரோ’ படத்தின் ஒரு உணர்வுபூர்வமான காதல் பாடல். இது ஜானகி மற்றும் எஸ்பிபி காம்போவின் சிறந்த பாடல்களில் ஒன்றாகும். கே பாக்யராஜ் இசையமைத்துள்ளார், மீண்டும் பார்க்க ரசிக்க வைக்கும் பாடல் இது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.