காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையைச் சேர்ந்தவர் நிஜிபு. இவர் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகன் ஆதில் முகமது (12) அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளரார். கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் மாயமானதாக கூறப்படுகிறது. சிறுவனை கண்டுபிடித்து தர கோரி பெற்றொர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அங்குள்ளகுளத்தில் ஆதில் முகமதின் சடலம் தண்ணீரில் மிதந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்த மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.