His final fight to occupy ADMK office also fails, OPS out; EPS gets post: கடைசி நேரத்தில், வன்முறை மோதலுக்குப் பிறகு, திங்கள்கிழமை (ஜூலை 11) காலை அ.தி.மு.க தலைமையகத்திற்குள் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலவந்தமாக நுழைந்தனர். இருப்பினும், தடுக்க வேண்டியததை அவரால் தடுக்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அவரை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது. பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை இ.பி.எஸ் தரப்பு நிறைவேற்றியது.
ஏறக்குறைய அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால், இ.பி.எஸ் இப்போது கட்சியில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார், அவருக்கு முன் எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் வி.கே.சசிகலா மட்டுமே வகித்த பதவியை இ.பி.எஸ் இப்போது வகிக்கிறார்.
இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் உள்ளிட்ட 3 பேரின் எம்.எல்.ஏ பதவி என்ன ஆகும்?
2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்ததில் இருந்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இரட்டை தலைமையாக அ.தி.மு.க.,வை வழிநடத்தி வந்தனர். ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார், அதேநேரம் இ.பி.எஸ் முதல்வராகவும் இருந்ததால் இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்க ஒப்புக்கொண்டார்.
கடந்த மாதம், இ.பி.எஸ் தரப்பானது இரட்டை தலைமை அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்தது, இ.பி.எஸ்- இன் புகழ் உட்பட பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டி, ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலியுறுத்தியது, இந்த கோரிக்கை திங்கள்கிழமை உச்சக்கட்டத்தை அடைந்தது. மாற்றத்தை தடுக்க ஓ.பி.எஸ் மேற்கொண்ட பல முயற்சிகள் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது.
திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ஓ.பி.எஸ் மற்றும் ஆதரவாளர்கள், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். அப்போது, பொதுக்குழு கூட்டத்திற்கு இ.பி.எஸ் மற்றும் ஆதரவாளர்கள் தலைமை தாங்கினர். அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ் அணியினர் சென்றதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கல்வீச்சும், தடியடியும் ஏற்பட்டது.
அவரது சொந்த ஊரான தேனி மற்றும் அவரது ஆதரவாளரான வைத்திலிங்கத்தின் கோட்டையான தஞ்சாவூரைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொண்ட ஓ.பி.எஸ் குழுவினர், இ.பி.எஸ்-ஐ திருடன் என்று கோஷம் எழுப்பியவாறு வலுக்கட்டாயமாக அ.தி.மு.க அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை பெரும்பான்மை ஆதரவுடன் நடத்த அனுமதித்து, சென்னை உயர்நீதிமன்றம் இ.பி.எஸ் தரப்பின் மனுவுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும் முன், உள்ளே இருந்த இ.பி.எஸ் சுவரொட்டிகள் மற்றும் ஃப்ளெக்ஸ் போர்டுகளை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.
பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்ட முதல் தீர்மானங்களில் ஒன்று கட்சியின் இரட்டை தலைமைத்துவ முறையை கலைப்பது. நான்காவது தீர்மானம் ஒரு இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது, ஐந்தாவது தீர்மானம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு மறுபெயரிப்பட்டவாறு ஜெயலலிதா ‘நிரந்தர பொதுச் செயலாளராக’ இருந்தபோதும், இடைக்கால பொதுச் செயலாளராக இ.பி.எஸ் நியமிக்கப்படுவது. நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் வரை கட்சியை நிர்வகிக்கும் அதிகாரமும் இ.பி.எஸ்-க்கு வழங்கப்பட்டது. இறுதியில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை அ.தி.மு.க தலைவர்கள் மீதான வழக்குகளை தொடர தி.மு.க அரசுடன் ஒத்துழைத்ததாக ஓ.பி.எஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அ.தி.மு.க.,வின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார், முன்பு பொருளாளராக ஓ.பி.எஸ் இருந்தார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் செல்வாக்கு மிக்க மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவரும், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிகார மோதலில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக இருந்தவருமான நத்தம் விஸ்வநாதன், ஓ.பி.எஸ்-க்கு இருக்கும் “கொடூரமான முகம்” ஓ.பி.எஸ் அணியில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று குற்றம்சாட்டினார். மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, சசிகலாவை குறிப்பிட்டு ஓ.பி.எஸ் “ஒரு குடும்பத்தால்” பதவி உயர்வு பெற்றவர் என்று கூறினார்.
இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் பொதுக்குழுவில் இ.பி.எஸ் ஆற்றிய உரையில், ஓ.பி.எஸ் கட்சிக்காக எதையும் தியாகம் செய்யவில்லை என்றும் அவரை “முதுகில் குத்துபவர்” என்றும் கூறினார். மேலும், “இந்த விவகாரம் (ஒற்றை தலைமை) முதலில் எழுந்தபோது, நமது மூத்த தலைவர்கள் அவருடன் பலமுறை பேசினார்கள். கட்சியின் எதிர்காலத்திற்காக ஒற்றைத் தலைமைக்கு அனுமதி வழங்குமாறு கெஞ்சினோம். நாங்கள் அவரிடம் கேட்டபோதெல்லாம், அவர் எப்போதும் தியாகம் செய்தாக கூறினார். கட்சிக்காக எதை விட்டுக்கொடுத்தீர்கள்? உண்மையில், நீங்கள் கட்சிக்காக எந்த தியாகமும் செய்யவில்லை… அம்மாவின் (மறைந்த ஜெயலலிதாவின்) நம்பகமான விசுவாசி என்று கூறிக்கொண்டீர்கள். எப்படி? 1989 இல், நீங்கள் ஜெயலலிதாவுடைய போட்டியாளர்களுக்காக வேலை செய்தீர்கள். நீங்கள் உண்மையான விசுவாசி இல்லை, ”என்றும் இ.பி.எஸ் கூறினார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ்ஸை திமுக கைக்கூலி என்று அழைத்ததுடன், திங்கள்கிழமை காலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்கு தி.மு.க அரசு பாதுகாப்பு வழங்காததற்கு இதுவே காரணம் என்று கருத்து தெரிவித்தார். 1990களில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்துப்போது, வைகோ தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ குழுவினருக்கு அனுமதி மறுத்ததை ஜெயக்குமார் நினைவு கூர்ந்தார்.
பொதுக்குழு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, ஓ.பி.எஸ் குழுவினர் வாகனங்களில் கோப்புகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இறுதியாக போலீசார் தரையிறங்கியவுடன், ஓ.பி.எஸ் குழு மாலை வரை வெளியேற மாட்டோம் என்று மிரட்டியது, ஆனால் கட்சி அலுவலகத்தை வருவாய்த் துறையினர் கைப்பற்றுவார்கள் என்று அரசாங்கம் கூறியது. இறுதியாக ஓ.பி.எஸ் சென்றதும், வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
தனது உத்தரவில், ஓ.பி.எஸ் தனது வழக்கை கட்சியின் பொதுக்குழுவில் முன்வைப்பதற்குப் பதிலாக நீதிமன்றத்தை அணுகுவதைத் தேர்ந்தெடுத்ததை உயர்நீதிமன்றம் எதிர்த்தது. “மனுதாரர் தன்னால் சாதிக்க முடியாததை, நீதிமன்றத்தின் மூலம் அடைய விரும்புகிறார், நீதிமன்றங்கள் நிச்சயமாக கட்சியின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கும், அதுவும் கட்சியின் ஆயிரக்கணக்கான மற்ற உறுப்பினர்களின் நலன்களுக்கு முரணான ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களின் கோரிக்கையில் நீதிமன்றம் தலையிடாது,” என்று நீதிமன்றம் கூறியது.
ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக இதேபோன்ற மனுவை தனி நீதிபதி நிராகரித்ததை அடுத்து, ஓ.பி.எஸ், அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு டிவிஷன் பெஞ்சில் இருந்து தற்காலிகமாக இ.பி.எஸ் பதவி உயர்வுக்கு தடை விதித்தார்.