சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 4 கிலோ 320 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் வத்தளை ஹெந்தல பிரதேசத்தை சேர்ந்த (35) வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.