இந்தியாவின் மீண்டும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் மீதான ஆர்வம் என்பது சமீபத்திய காலமாக திடீரென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக பல தொழிலதிபதிர்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகளும் இதில் ஆர்வம் காட்டி வருவதை சமீபத்திய நாட்களாக காண முடிகிறது. குறிப்பாக மும்பை போன்ற பெரு நகரங்களில் பத்திர பதிவுகள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டி காட்டுகின்றன.
இதனை உறுதிபடுத்தும் விதமாக 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர்.
3 பக்கமும் அடிவாங்கும் கிரிப்டோகரன்சி.. !

யாரந்த ஐவர்
வீவொர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கரன் விர்வானி, CRED’s-ன் குனால் ஷா, மாமார்த்தின் வருண் அலாக், ட்ரூம்மின் சந்தீப் அகர்வால் மற்றும் ஆஃப்பிசினஸின் நித்தின் ஜெயின் உள்ளிட்டோர் ரியல் எஸ்டேட் தளமான PropReturns-ல் வெளியிடப்படாத தொகையினை முதலீடுகளை செய்துள்ளனர்.

யாரால் நிறுவப்பட்டது?
இதில் காயின்பேஸ் மற்றும் பின்டெரஸ்ட்-ன் நிர்வாக குழு உறுப்பினர் கோகுல் ராஜாராமும் கலந்து கொண்டுள்ளார்.
ப்ராப் ரிட்டர்ன்ஸ், கடந்த 2020ம் ஆண்டில் பிட்ஸ் பிலானி, பட்டதாரிகளாக கெனிஷ் ஷா, ஜெயந்த் பனிகார் மற்றும் சோமில் மாத்தூர் ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

என்ன செய்கிறது?
இந்த நிறுவனம் வாடகைக்கு விடப்படும் வணிக சொத்துகள், பிளாட்டுகள், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் மற்றும் ரியல் எஸ்டேட் கடன் உள்ளிட்ட வருமானம் ஈட்டுபவற்றில் முதலீடு செய்ய ஒரு தளமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களை அதிகரிக்கவும், கூட்டாளர்கள், ரியல் எஸ்டேட் தரகர்கள், டெவலப்பர்கள் மற்றும் சொத்து உரிமையாளார்களுடன் கூட்டு சேர்வதையும் எதிர்பார்க்கிறது.

ஒரே வருடத்தில் ரூ.100 கோடி
ப்ராப் ரிட்டர்ன்ஸ் புனே, ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு, டெல்லி என்சிஆர் ஆகிய பகுதிகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.; இது குறித்து ஆய்வு செய்யவும் சந்தையின் போக்கினை தெரிந்து கொள்ளவதையும் திட்டமிட்டு வருகின்றது. ஒரு வருட செயல்பாட்டின் மூலம் ப்ராப் ரிட்டர்ன்ஸ் 100 கோடி ரூபாய்க்கு மேலாக பரிவர்த்தனை நடத்தி வருகின்றது.
Karan virwani, kunal shah, varun alagh and sandeep agarwal start up CEOs invest in a real estate venture
Karan virwani, kunal shah, varun alagh and sandeep agarwal start up CEOs invest in a real estate venture/ரியல் எஸ்டேட்-ல் திடீர் முதலீடு.. ஸ்டார்ட்அப் தலைவர்கள் அதிரடி முடிவு..!