IND vs ENG 3rd ODI Cricket Score Updates: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3 ஆவது ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் 2 அணிகளும் தலா 1 வெற்றியை பதிவுசெய்துள்ளன. எனவே தொடரை வெல்லும் அணி எது என்ற எதிர்ப்பார்ப்பு, இந்த போட்டியை சுவாரஸ்மாக்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஒதுங்க வேண்டுமா விராட் கோலி? பிரபலங்கள் கூறுவது என்ன?
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி விவரம் : ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், யஷ்வேந்திர சஹல், பிரசித் கிருஷ்ணா
இங்கிலாந்து அணி விவரம் : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியம் லிங்க்ஸ்டன், மொயீன் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸே, ரீஸ் டோப்லே
இங்கிலாந்து 259 க்கு ஆல் அவுட்
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். ஜானி பேர்ஸ்டோ டக் அவுட் ஆக, அடுத்து வந்த ஜோ ரூட்டும் டக் அவுட் ஆனார். இருவரது விக்கெட்களையும் சிராஜ் வீழ்த்தினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜேசன் ராய் 31 பந்துகளில் 41 ரன்கள் அடித்து, அவுட் ஆனார்.
இன்னொரு ஆட்டக்காரரான ஸ்டோக்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரது விக்கெட்டையும் ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் மொயீன் அலி அணியின் எண்ணிக்கையை உயர்த்த கடுமையாக போராடினர். மொயீன் அலி 34 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் நிதானமாக ஆடி வந்த நிலையில், 27 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ரன் எதுவும் சேர்க்காத நிலையில் பட்லரும் அவுட் ஆனார். இருவரது விக்கெட்டையும் பாண்ட்யா வீழ்த்தினார். அடுத்து டேவிட் வில்லியும், ஓவர்டனும் சிறிது நேரம் தாக்குபிடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த உதவினர். வில்லி 18 ரன்களிலும், ஓவர்டன் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரது விக்கெட்களையும் சஹல் வீழ்த்தினார்.
அடுத்து வந்த டோப்லே டக் அவுட் ஆக இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. கார்ஸே 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில், பாண்ட்யா 4 விக்கெட்களையும், சஹல் 3 விக்கெட்களையும், சிராஜ் 2 விக்கெட்களையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்தியா 260 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடி வருகிறது.