இளம் தலைமுறையின் இன்று இணையதளம், சமுகவலைத்தளம், டெக்னாலஜி பயன்படுத்துவதால் அதிகம் சீரழிகின்றனர் என குறைக்கூறுவது உண்டு.
உண்மையில் எந்த ஒரு விஷயமாக இருந்தும் லாபம் நஷ்டம் இருப்பது போல இணையதளம், சமுகவலைத்தளத்தை சரியான முறையில் பயன்படுத்தி 15 வயதான வேதாந்த் டியோகேட் என்ற சிறுவன் பல கோடி இளைஞர்களை வியக்கவைத்துள்ளார்.
ஆபீஸ்-க்கு வர முடியாது, அதுவும் 5 நாளெல்லாம் ரொம்ப ஓவர்.. ஐடி ஊழியர்கள் பதில்..!

வேதாந்த் டியோகேட்
வேதாந்த் டியோகேட் வழக்கம் போல் தனது தாயின் பழைய லேப்டாப்பில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை ஸ்க்ரோலிங் செய்து கொண்டிருந்தபோது வெப்சைட் டெவலப்மென்ட் போட்டிக்கான இணைப்பையும் விளம்பரத்தையும் பாத்துள்ளார். அது தான் அவருடைய வாழ்க்கையின் திருப்பு முனையாக இருக்கும் என்ற அவர் நினைத்திருக்க மாட்டார்.

வெப்சைட் டெவலப்மென்ட்
இந்த வெப்சைட் டெவலப்மென்ட் போட்டியில் நுழைய முடிவு செய்து, 2000 க்கும் மேற்பட்ட வரி கம்பியூட்டர் கோடுகளை எழுதி, இரண்டு நாட்களில் தனது பணியை முடித்தார். இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றாள் இந்த போட்டியில் வெற்றி பெற்று அவரது கனவு பணியை அவருக்கு கிடைத்தது தான்.

33 லட்சம் ரூபாய் சம்பளம்
இந்த போட்டியில் வெற்றிப்பெற்ற வேதாந்த் டியோகேட்-க்கு நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட நிறுவனம் அந்த இளைஞருக்கு மனிதவள மேம்பாட்டுக் குழுவில் ஒரு பணியை வழங்கியது. இந்த அமெரிக்க நிறுவனம் ஆண்டுக்கு 33 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

15 வயது
இந்த பணியில் வேதாந்த் டியோகேட் அவர் மற்ற ஊழியர்களுக்கு வேலையை பகிர்ந்து அளித்து அவர்களை நிர்வகிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, வேதாந்திற்கு வெறும் 15 வயது தான் என்று நிறுவனம் கண்டறிந்த பிறகு, அந்தச் வேலையை திரும்பப் பெறப்பட்டது.

நியூ ஜெர்சி நிறுவனம்
இருப்பினும், இந்த நியூ ஜெர்சி நிறுவனம் வேதாந்திடம் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும், அவர் தனது பள்ளி கல்வியை முடித்த பிறகு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

இணையதளம்
வேதாந்த், animeeditor.com என்ற இணையதளத்தை உருவாக்கினாப், இது வாடிக்கையாளர்கள் பிளாக், வ்லாக்கள், சாட்பாட் மற்றும் வீடியோ பார்க்கும் தளத்தின் கூடுதல் அம்சங்களுடன் YouTube போன்ற வீடியோக்களை பதிவேற்றும் விருப்பத்தை வழங்குகிறது.

தங்கப் பதக்கம்
வாதோடா-வில் (Wathoda) உள்ள நாராயண இ-டெக்னோவில் உள்ள தனது பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ரேடார் சிஸ்டம் மாதிரியை வடிவமைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வேதாந்தின் பெற்றோர் உதவிப் பேராசிரியர்கள்.

லேப்டாப்
இதுவரை லேப்டாப் வாங்கிக் கொடுக்காத வேதாந்த் பெற்றோர்கள் வேலை வாய்ப்பைப் பற்றி தெரிய வந்ததை அடுத்து, அவருக்கு ஒரு புதிய லேப்டாப்பை வாங்கிக் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து 1000 பேர் பங்குப்பெற்ற இந்த போட்டியில் இருந்து வேதாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. இனி பிரிட்டன் நாட்டில் வேலை வாங்குவது ஈசி.. எப்படி தெரியுமா..?!
15 yrs old Vedant Deokate bagged 33 lakhs salary job from USA; After winning website development contest
15 yrs old Vedant Deokate bagged 33 lakhs salary job from USA; After winning website development contest 15 வயதில் 33 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை.. ஆனா ஒரு பிரச்சனை..!