கொழும்பு : இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அனைத்து கட்சி பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று முன்தினம் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தலைமையிலான அரசில், 17 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இது குறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியதாவது:இலங்கை அமைச்சரவையில் தற்போது 17 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்; 30 அமைச்சர்கள் வரை நியமனம் செய்ய முடியும். தற்போது ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அமைச்சர்களுடன், எதிர்க்கட்சியினரையும் அமைச்சர்களாக்கி கூட்டணி அமைச்சரவையை உருவாக்க, ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டுள்ளளார்.
இது தொடர்பாக, இதர கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். எனினும் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது நடக்கும் என உறுதியாக கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, நேற்று முன்தினம் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பல நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இதையடுத்து, அந்நாடுகளின் துாதர்களுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசினார். அப்போது, போலீசாரின் எச்சரிக்கையை மீறி போராட்டக்காரர்கள், பிரதமர், அதிபர் அலுவலகங்களை நோக்கி முன்னேறியதால், வன்முறையை தவிர்க்கவும், கூட்டத்தை கலைக்கவும் போலீசார் தடியடி நடத்தியதாக அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement