உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா-வை உலக நாடுகள் கட்டம் கட்டி அடித்த நிலையில், தற்போது உலக நாடுகள் உடன் வர்த்தகம் செய்வது என்பது ரஷ்யாவுக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது.
இதனால் ரஷ்யா அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தித் தனது வர்த்தகத்தை மேம்படுத்தித் தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளை உருவாக்கியுள்ளது. இதேவேளையில் சீனா (மங்கோலியா வழியிலும்) மற்றும் இந்தியாவுக்கு (ஈரான்) அதிகப்படியான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை செய்யும் நீண்ட ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐரோப்பிய சந்தை இழப்பை ஈடு செய்துள்ளது.
இதன் மூலம் ரஷ்யாவின் வர்த்தக வாய்ப்புகள் சாதகமாக மாறியுள்ள நிலையில் உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா-வை நெருக்கிய ஜெர்மனி-க்கு தலைவலி கொடுக்க விளாடிமிர் புதின் அரசு துவங்கியுள்ளது.
ரஷ்யா – சீனா இனி அசைக்க முடியாது.. சைபீரியா டூ ஷாங்காய்.. விளாடிமிர் புதின் செம ஹேப்பி..!

ஜெர்மனி
ஜெர்மனி பல மாதங்களாக ரஷ்யா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் எனக் கூறிவந்த நிலையில், ரஷ்யா சொன்னது போலவே செய்துள்ளது. ஜெர்மனி கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு-வுக்காக அதிகம் ரஷ்யாவைத் தான் பல காலமாக நம்பியுள்ளது, போருக்கு பின்பு தடாலடியாக ரஷ்யா உடனான எரிபொருள் வர்த்தகத்தை நிறுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

பழிவாங்கும் ரஷ்யா
இந்த நிலையில் ஜெர்மனி-யின் நெருக்கடியை வாய்ப்பாகப் பயன்படுத்தித் தன் நாட்டின் மீது தடை விதித்ததிற்குப் பழிவாங்கும் விதமாக ரஷ்யா அடுத்தடுத்து ஜெர்மனி நாட்டுக்கான எரிவாயு பைப்லைன்-ஐ குறிவைத்து நடவடிக்கை எடுத்த வருகிறது என ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது.

Nord Stream 1 பைப்லைன்
ஜெர்மனி நாட்டுக்கான எரிவாயு சப்ளையை உறுதி செய்யும் Nord Stream 1 பைப்லைன் ரஷ்யா – ஐரோப்பாவை இணைக்கிறது, ஜூலை மாதம் பராமரிப்பு பணிகளுக்காக 10 நாட்கள் இந்தப் பைப்லைன் விநியோகத்தை முழுமையாக மூடியது. இதைத் தொடர்ந்து 10 நாட்களுக்குப் பின்பு வெறும் 40 சதவீத சப்ளை உடன் இயங்கியது.

20 சதவீதமாகக் குறைப்பு
தற்போது ரஷ்யா Nord Stream 1 பைப்லைன் சப்ளையை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது, இதையும் ஜெர்மனி ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் ரஷ்யா சொன்னது போலவே டெக்னிக்கல் பிரச்சனை எனக் காரணம் கூறி எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது.இதை ரஷ்யாவின் அரசியல் விளையாட்டு என ஜெர்மனி விமர்சனம் செய்கிறது.

ஜெர்மனி – ஐரோப்பா
இதேவேளையில் ஜெர்மனியில் குளிர்காலம் துவங்க உள்ள நிலையில் மின்சார உற்பத்தி முதல் வீட்டை சூடாக வைக்க உதவும் எரிவாயுவை அந்நாடு அதிகம் சேமிக்க விடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு நார்டு பைப்லைனில் எரிவாயு சப்ளை-ஐ ரஷ்யா குறைத்துள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இது ஜெர்மனி மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் பாதிக்கும்.

ரஷ்யா அரசின் போர் தந்திரம்
ரஷ்யா அரசின் போர் தந்திரத்திலும், வெளியுறவுக் கொள்கையிலும் தற்போது எரிவாயு பங்கு பங்கு வகிப்பதாக Nord Stream 1 பைப்லைன் திட்டத்தின் ஜெர்மனி நெட்வொர் ரெகுலேட்டார் Klaus Mueller விளாடிமிர் புதின் அரசை விமர்சனம் செய்துள்ளார். மேலும் Klaus Mueller எரிவாயு சப்ளை 20 சதவீதமாகக் குறைந்துள்ளதையும் உறுதி செய்துள்ளார்.
Russia cuts gas supply in Nord Stream 1 to 20 percent; Germany on edge of risk ahead of winter
Russia cuts gas supply in Nord Stream 1 to 20 percent; Germany on edge of risk ahead of winter ஜெர்மனி-யை புலம்பவிட்ட ரஷ்யா.. பூச்சாண்டி காட்டும் விளாடிமிர் புதின்..!