ரஷ்யாவின் முடிவு… சுடுதண்ணீர் தொடர்பில் மேலும் ஒரு ஜேர்மன் நகரம் முக்கிய அறிவிப்பு


ஜேர்மனிக்கு அளிக்கப்பட்டு வந்த எரிவாயு அளவை ரஷ்யா குறைத்துள்ள நிலையில் சுடுதண்ணீருக்கு தடை விதித்துள்ளது முக்கிய ஜேர்மன் நகரம் ஒன்று.

இதனையடுத்து, ஜேர்மனியின் முக்கிய நகரமான ஹனோவரில் அமைந்துள்ள அருங்காட்சியகங்களில் விளக்குகள் அணைக்கப்படும் என்பதுடன், நீச்சல் குளங்களை வெப்பமூட்டுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அதிரடி முடிவால் ஜேர்மனியில் எரிவாயு கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி நகர நிர்வாக வளாகங்கள், நினைவுச் சின்னங்கள் இருளில் மூழ்கும் என்றே கூறப்படுகிறது.

இதனால் தற்போது நகர மக்கள் குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கியுள்ளதாகவும், இதே நிலை நீடிக்கும் என்றால் குளிர் காலத்தில் மக்களின் நிலை பரிதாபமாகிவிடும் என்றே அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் முடிவு... சுடுதண்ணீர் தொடர்பில் மேலும் ஒரு ஜேர்மன் நகரம் முக்கிய அறிவிப்பு | German City Turns Off Hot Water

ரஷ்யாவால் கடுமையான மாற்றங்களுக்குள்ளாகும் ஹனோவர் ஐரோப்பாவின் முதல் பெரிய நகரம் என தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, இதே நிலைக்கு மேலும் பல நகரங்கள் உள்ளாகும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சுடுதண்ணீருக்கு தடை உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே தலைநகர் பெர்லினில் எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒளிரச் செய்யும் விளக்குகள் அனைத்தும் அணைக்க முடிவாகியுள்ளது.
உக்ரைன் மீதான போருக்கு முன்னர் ஜேர்மனியின் மொத்த தேவையில் 55% எரிவாயுவை ரஷ்யாவில் இருந்தே வாங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.