டாஸ்மாக் பார் டெண்டர்; ஆகஸ்ட் 2 முதல் விண்ணப்பம்

Tamilnadu TASMAC bar tender starts august 2: டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கு புதிய உரிமம் வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த டெண்டர் வெளிப்படையாக நடக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதன் சில்லறை கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை நடத்துவதற்கு புதிய உரிமம் வழங்க டெண்டர்களை வெளியிட உள்ளது.

இதையும் படியுங்கள்: அனைத்துக் கட்சி ஆலோசனை: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இரு தரப்புக்கும் அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், அதன் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் 2 முதல் 18 வரை அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும், டாஸ்மாக் இணையதளத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். டெண்டர்களை சீல் செய்யப்பட்ட கவரில் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாகும். மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதே நாளில், விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு, அதிக தொகையை மேற்கோள் காட்டுபவர்களுக்கு பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் ஆவணங்களை சரிபார்ப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021 டிசம்பரில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட பல பார்கள் 8 மாதங்களுக்குள் எந்த காரணமும் தெரிவிக்காமல் மூடப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த செயல்முறை கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டதை போலல்லாமல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்க செயலர், தூத்துக்குடியைச் சேர்ந்த சாம்சன் தங்கராஜ் கூறுகையில், ”விதிகளின்படி, பார்களை நடத்த ஏலம் எடுப்பவர்கள், வாடகை கட்டடமாக இருந்தால், கட்டடத்தின் உரிமையாளரிடம் NOC பெற வேண்டும். இருப்பினும், எனது சொந்த இடத்தில் நான் நடத்தி வந்த பார்களுக்கான ஒப்பந்தங்கள் ஒருவருக்கு வழங்கப்பட்டன. வெளிப்படையாக, வென்ற ஏலதாரர் என்னிடம் இருந்து NOC பெறவில்லை. அது ஒரு விதிமீறல். மேலும், ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள், ஏற்கனவே உள்ள உரிமம் பெற்றவர்களிடம், அரசுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய பணத்தை மாதந்தோறும் செலுத்தினால், மதுக்கடையை தொடர்ந்து நடத்தும்படி கேட்டுக் கொண்டனர். சில மாதங்களிலேயே பல பார்கள் மூடப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். தூத்துக்குடியில் உரிமம் பெற்ற 111 பார்கள் உள்ளது, 12 மட்டுமே சட்டப்படி இயங்கி வருகிறது,” என்று கூறினார்.

மற்றொரு பார் உரிமையாளர், பலருக்கு முந்தைய ஏலத்தில் விண்ணப்பப் படிவங்கள் கூட கிடைக்கவில்லை. விண்ணப்பங்களை பெற்றவர்கள் கடைசி தேதியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படவில்லை. திருத்தம் செய்து குறைந்த தொகையை மேற்கோள் காட்டிய ஒருவருக்கு மாவட்ட மேலாளர்கள் வெளிப்படையாக ஒப்பந்தத்தை வழங்கிய நிகழ்வுகள் உள்ளன, என்று கூறினார்.

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன், முறைகேடுகளை எதிர்த்ததால், 8 மாவட்டங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள பார் உரிமையாளர்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. சீல் செய்யப்பட்ட டெண்டர் அட்டைகளைத் திறப்பது மற்றும் வெற்றிகரமான ஏலதாரரை இறுதி செய்வது ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் நடக்க வேண்டும் மற்றும் முழு நிகழ்வையும் வீடியோ படம் எடுக்க வேண்டும். மேலும், அந்தந்த கடை எண்ணுடன் ஏலம் விடப்படும் பார்கள் எவை என்பதை டாஸ்மாக் நிறுவனம் முறையாக அறிவிக்க வேண்டும், என்று கூறினார்.

டாஸ்மாக் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, ​​முறைகேடு நடந்ததாக கூறப்படுவதை மறுத்ததாக TOI செய்தி வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.