திருச்செந்தூரில் சபரீசன் திடீர் யாகம்: பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக பா.ஜ.க புகார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் யாகம் நடத்த கடந்த 5 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு்ளளது.

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அக்கட்சியின் நிர்வாகிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யும்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டாலும் அவர்களுக்கு சரியான பதில் கிடைப்பதில்லை.

அந்த வகையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனது நண்பர் ஒருவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றதை தொடர்ந்து அங்கு கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளர்.

எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவதற்காக சிறப்பு யாகம் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனது நண்பர் வெங்கட்டுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். இதற்காக அங்கே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், யாகம் நடத்துவதற்காக வள்ளி குகைக்கு செல்லும் நடைபாதையில் சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நேற்று காலை திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த சபரீசன் மற்றும் அவரது நண்பர், இருவரும் மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு சம்ஹார மூர்த்தி சன்னதியில் தியானம் செய்தனர். அதன்பிறகு வள்ளி குகை நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பந்தலில் யாகம் நடத்தினார்

இந்த யாகம் காரணமாக காலை 6 மணி முதல் வள்ளி குகைக்குள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வள்ளி குகை அருகே தடுப்பு வேலிகள் அமைத்து தனியார் பாதுகாவர்கள், காவல்துறையினர் என பலரும் பாதுகாப்பிற்காக நின்றிருந்தனர் இதனிடையே பக்தர்கள் பலரும் தங்களை வள்ளி குகை்குள் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு பாதுகாவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் வள்ளி குகைக்கு தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.  ,  

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் காயம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வரின் மருமகனுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜகவின் ஆன்மீக மற்றும் ஆலய மேட்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் ஓம்பிரபு அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.