அமெரிக்காவின் பணவீக்கம் உயர்வு, வட்டி விகித உயர்வு, மந்தமான நுகர்வோர் சந்தை போன்ற பல பிரச்சனைகள் காரணமாகப் பொருளாதார மந்த நிலை உருவாகும் என்ற அச்சம் இருக்கும் காரணத்தால் பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வந்தது.
அமெரிக்க ரீடைல் சந்தையைக் கட்டியாண்டு வரும் வால்மார்ட் நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கத்தில் ஈடுபட்டு உள்ளது. வால்மார்ட் நிறுவனத்தின் அறிவிப்பு ஏற்கனவே பணிநீக்கம் குறித்த அச்சத்தில் இருந்து அமெரிக்க ஊழியர்கள் மத்தியில் கூடுதலாகப் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குட்டி நாடு தான் தைவான்.. ஆனால் சாதாரணமானது இல்லை..!

வால்மார்ட்
வால்மார்ட் நிறுவனத்தில் பல தரப்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வால்மார்ட் நிர்வாகத்தில் முக்கியமான மறுசீரமைப்பு பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் சில நூறு கார்பரேட் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

200 ஊழியர்கள்
இதன் அடிப்படையில் வால்மார்ட் சுமார் 200க்கும் அதிகமான கார்ப்ரேட் பிரிவு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளது என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வால்மார்ட் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னணி நிறுவனங்களாக டெஸ்லா, நெட்பிளிக்ஸ், மைக்ரோசாப்ட், காயின்பேஸ் போன்ற நிறுவனங்கள் பட்டியலில் இணைந்துள்ளது.

அதிகப்படியான ஊழியர்கள்
வால்மார்ட் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது சிஇஓ டக் மெக்மில்லன் 2021 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பின்பு ஏற்பட்ட வர்த்தகத் தொய்வில் இருந்து மீண்டு வர அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்த காரணத்தால் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.

பங்கிற்குச் சராசரி வருமானம்
இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் வால்மார்ட் நிறுவனம், இந்த வருடம் ஒரு பங்கிற்காகச் சராசரி வருமானம் (adjusted earnings per share) 13 சதவீதம் வரையில் குறையும் என அறிவித்தது. வால்மார்ட் பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரிக்கத் துவங்கிய போது ஒரு பங்கிற்குக் கிடைக்கும் வருமானம் 1 சதவீதம் மட்டுமே குறையும் என அறிவித்தது. ஆனால் வெறும் 5 மாதத்தில் இதன் அளவீட்டை 13 சதவீதமாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

30,000 ஊழியர்கள்
அமெரிக்காவில் சிறிய, பெரிய டெக் நிறுவனங்களில் மட்டும் சுமார் 30,000 க்கும் அதிகமான டெக் ஊழியர்களைப் பணியில் இருந்து ஜூலை மாதம் நீக்கியுள்ளதாகக் கிரன்ச்பேஸ் அறிவித்துள்ளது. பொருளாதாரச் சரிவு தொழில்நுட்பத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.
7 வருடத்தில் முதல் முறை லேட்டாக வந்த ஊழியர் பணிநீக்கம்.. சக ஊழியர்கள் எடுத்த விநோத முடிவு..!
Walmart plans to layoff more the 200 corporate employees
Walmart plans to layoff more the 200 corporate employees வால்மார்ட் திடீர் முடிவு.. பயத்தில் ஊழியர்கள்.. யார் பணிநீக்கம்..?!