75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு மத்திய அரசால் இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் தேசியக் கொடிகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை எளிதாக்க, அனைத்து அஞ்சல் நிலையங்களும் சுதந்திர தினத்திற்கு முன் விடுமுறை நாட்களில் செயல்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய தபால் நிலையங்கள் இந்த பொது பிரச்சாரத்தை செயல்படுத்தும் அளவிற்கு செயல்படும்.
பொது விடுமுறை நாட்களில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 2022 ஆகஸ்ட் 7, 9 மற்றும் 14 தேதிகளில் அஞ்சல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடிகளை விநியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.