புதுடெல்லி: பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி முதல்வராகவும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த 2014 முதல் 2019 வரையில் மோடி தலைமையிலான அரசில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருடைய 3-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், “சுஷ்மா ஸ்வராஜ், எளிமை, கடின உழைப்பு, தேசப்பற்று ஆகிய பொது வாழ்வின் உயர்ந்த லட்சியங்களை இந்திய அரசியலில் நிறுவினார். வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, நாட்டு மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்தார். அவர் என்றென்றும் நமது நினைவில் நீடிப்பார்” என கூறியுள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.