புதுடில்லி: நிடி ஆயோக் அமைப்பின் 7 வது நிர்வாக குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நடந்தது.
நிடி ஆயோக் அமைப்பில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.
இந்த அமைப்பின் 7 வது நிர்வாக குழு கூட்டம் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்வி கொள்கை பள்ளிக்கல்வியின் அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யநாத், பிரேம் காண்டு, ஜெகன்மோகன்ரெட்டி, பூபேந்திர படேல், மனோகர்லால் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கலந்து கொண்டார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு நிடி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் முதல்முறையாக நேரடியாக நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement