`சிநேகம் ஃபவுண்டேசன்’ என்கிற என்னுடைய அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி’
-கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இப்படிப் புகார் தந்தார் கவிஞர் சிநேகன்.
இரண்டு நாள் கழித்து இந்தப் புகாரை மறுத்த நடிகை ஜெயலட்சுமி,
‘நான் ‘சிநேகம்’ என்கிற பெயரில் 20சு8ம் ஆண்டிலிருந்து ஒரு அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறேன்’ என்றார்.
‘பெயர்க் குழப்பம்’ என நினைத்தால் அப்படிக் கடந்து போக முடியவில்லை.

ஏனெனில், ஜெயலட்சுமியிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப, அது திரும்பி வந்தது. தொடர்ந்து எங்கள் தரப்பில் சிலர் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ‘எங்காவது வெளியில் மீட் பண்ணலாம்’ என ஜெயலட்சுமி தரப்பில் பதில் வந்ததாகச் சொல்கிறார் சிநேகன்.
இதற்குப் பதில் அளித்த ஜெயலட்சுமியோ, ‘நான் சினிமா, சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். என்னுடைய முகவரி வேண்டுமென்றால் அங்கேயே கிடைக்கும். அங்கெல்லாம் சிநேகன் அணுகவில்லையா எனத் தெரியவில்லை. தவிர, என்னைத் தொடர்பு கொன்டு அவரோ, அல்லது அவர் சார்பாகவோ யாரும் எதுவும் பேசவே இல்லை.
அப்படி இருக்க, ‘வெளியில் மீட் பண்ணலாம்’னு நான் சொன்னேன்னு பொது வெளியில் சொல்றது என்னை ரொம்பவே காயப்படுத்தியிருக்கு. ஒரு பெண்ணின் நடத்தை தொடர்புடைய விஷயம் இது. அதனால இந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் ஆதாரத்தைக் காட்டியே ஆகணும். இல்லைன்னா, அவரைச் சும்மா விட மாட்டேன்.
அவதூறு வழக்கு, மாநில மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம்னு எல்லா இடத்துக்கும் புகார் தந்திருக்கேன்’ என்கிறார்.
மேலும் சிநேகனை இதற்கு முன் ஒரேயொரு முறை ஒரு நிகழ்ச்சியில் சநதித்துக் கை குலுக்கியதாக ஜெயலட்சுமி சொல்லும் நிலையில், சினேகனோ ஜெயலட்சுமியை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்கிறார்.
இருவரும் மாறி மாறிப் புகார் தந்திருக்கும் சூழலில் முறையான விசாரணையே உண்மை வெளிவர உதவும்.
இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்துள்ள நேர்காணல் இதோ…