கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வீட்டுக்குள் கைவிலங்குடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவர், வீட்டில் வசிக்கும் யுவதியின் கையை துணியால் கட்டி, கணவன் மற்றும் மனைவியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் துப்பாக்கி இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் தங்கம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில், வீட்டு உரிமையாளர்களை அறையில் வைத்து கதவைப் பூட்டி, வீட்டின் பிரதான கதவையும் மூடிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை கைது செய்ய பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.