ஆசிரியை மீதான போக்சோ வழக்கு; தள்ளுபடி செய்ய ஐகோர்ட் மறுப்பு| Dinamalar

பெங்களூரு : ”வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு மத்தியில், மாணவியின் பேன்டை கழற்ற வைத்த ஆசிரியை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது,” என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு ஹலசூரில் தனியார் பள்ளியில், 2017ல் படித்து வந்த 5 வயது மாணவியின் பேன்டை, வகுப்பில் மற்ற மாணவியர் முன்னிலையில், 41 வயது ஆசிரியை கழற்றியுள்ளார்.

இதனால் அழுத அம்மாணவி, தன் பெற்றோரிடம் விஷயத்தை கூறினார். அவர்கள் உடனடியாக ஹலசூரு போலீஸ் நிலையத்தில், ஆசிரியை மீது கிரிமினல் புகார் அளித்தனர்.புகாரில் குறிப்பிட்டிருந்ததாவது:குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை, முதலில் குழந்தையை அடித்துள்ளார், பின், வகுப்பில் தன் மகளின் பேன்டை கழற்றி, மற்ற மாணவர்கள் முன் நிற்க வைத்துள்ளார். மேலும், அந்த ஆசிரியர், இங்குள்ள இருட்டு அறையில் அடைத்து விடுவதாகவும், அங்கு கொடூரமான நாய் இருப்பதாகவும் குழந்தையை மிரட்டியுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, ஆசிரியை மீது போலீசார், ‘போக்சோ’ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ”ஒரு குழந்தையின் உடலை மற்றவர்களுக்கு காட்டுவது பாலியல் துன்புறுத்தலுக்கு சமம். இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. ஆசிரியை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.