2018-2020 | குண்டும் குழியுமான சாலையால் ஏற்பட்ட விபத்துகளில் சுமார் 5000 பேர் உயிரிழப்பு – சாலை போக்குவரத்து அமைச்சகம்

கடந்த 2018 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் சாலையில் இருந்த பள்ளங்களால் மொத்தம் 5,626 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் அண்மைய தரவுகளின் படி தெரியவந்துள்ளது.

பாதுகாப்பான சாலை பயணத்திற்கு பல்வேறு உத்திகளை அரசு முன்னெடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. அந்த அமைச்சகத்தின் அண்மைய தரவில்தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

>2018 = 2,015 பேர்
>2019 = 2,140 பேர்
>2020 = 1,471 பேர்
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்து ஏற்பட பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் வடிவமைப்பு, அதிக வேகம், மொபைல் போன் பயன்படுத்துவதால், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக சுமை ஏற்றப்பட்ட வாகனம், வாகனத்தின் நிலை, மோசமான வெளிச்சம், முந்தி செல்வது, பொதுப்பணித் துறையின் கவனக் குறைவு, வானிலை, ஓட்டுநரின் தவறு, தவறான பக்கத்தில் (திசையில்) வாகனம் ஓட்டுவது, சாலையின் குறைபாடு, மோட்டார் வாகனத்தின் குறைபாடு, சைக்கிள் ஓட்டுபவர்களின் தவறு, பாதசாரிகளின் தவறு போன்றவை விபத்துக்கான பிற காரணங்களாகும்.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அதிகம் ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு, அதனை சீர் செய்ய முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை வடிவமைப்பு திட்டமிடலின் போதே சாலை பாதுகாப்பு அதில் ஒருங்கிணைக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.