இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்ககரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
அதே சமயம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில இயற்கை முறை உணவுகள் மூலம் உடலின் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். தங்கள் சாப்பிடும் உணவின் மூலமாகவே நீரிழிவு நோயாளிகள் தங்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான நிலைக்கு வைத்துக்கொள்ள முடியும்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகள் மற்றும் வாழக்கை முறை பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் இயற்கை முறை மருத்துவ பொருட்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயம் நீரிழிவு நோயை நிர்வகிக்க அதிகம் உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு செரிமானப்பிரச்சினை ஒரு பெரிய சோதனையாக அமையும். அவ்வாறு இருக்கும்போது வெந்தையத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சினையில் இருந்து சுலபமாக விடுபடலாம். வெந்தயம் உடலில் உள்ள கார்போ ஹைட்ரெட் மற்றும் சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
மேலும் உடல் இன்சுலின் அளவை கட்டப்பாட்டில் வைத்திருக்க உதவும் வெந்தயம் சமையலுக்கு மட்டுமல்லாமல், பொடி செய்து தயிருடன் கலந்து சாப்பிடலாம். மேலும் வெந்தையத்தை டீ வைத்து குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். வெந்தய பொடியுடன், நெல்லிக்காய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை தண்ணீருடன் கலந்து குடித்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”