ஒரே நாடு; ஒரே உரம் திட்டம் உர மூட்டைகளில் ‘பாரத்’ கட்டாயம்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தின்படி,  உர மூட்டைகளில் ‘பாரத்’ பெயரை கட்டாயமாக அச்சிடும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு; ஒரே தேர்தல், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு என அனைத்து திட்டங்களையும்  ‘ஒரே நாடு’ திட்டத்தின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு முயல்கிறது.

இந்நிலையில், ஒன்றிய  உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு வருமாறு:
* நாடு முழுவதும் உர உற்பத்தி நிறுவனங்கள், ‘பாரத்’ என்ற பொது பெயரிலேயே உரத்தை விற்க வேண்டும்.
* மூட்டைகளில்  தங்கள் நிறுவனத்தின் பெயரை ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே அச்சிட வேண்டும்.
* யூரியாவாக இருந்தால், ‘பாரத் யூரியா’, டி-அம்மோனியம் பாஸ்பேட் என்றால் ‘பாரத் டிஏபி’ என்று பெரிய எழுத்துகளில் அச்சிட  வேண்டும்.
* அக்டோபர் 2ம் தேதி முதல் புதிய விதிமுறைப்படி உரத்தை அடைக்க, சாக்கு பைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை உர தயாரிப்பு நிறுவனங்கள்கடுமையாக எதிர்த்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.