அட சூரி அறிமுகமானது இந்த படத்திலா? 12 ஆண்டு போராட்டம் பரோட்டா சூரி ஆன கதை

சென்னை : நடிகர் சூரி தனது 20 வது வயதில் நடிக்க வந்துவிட்டார். ஆனால் அவரை எல்லோரும் பரோட்டா சூரியாக பிரபலமானவுடன் தான் திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர்.

சினிமா ஆசையால் வரவில்லை வறுமை காரணமாக வேலைத்தேடி சென்னை வந்தவர் பின்னர் சினிமா வாய்ப்புக்காக அலைந்து சிறிய ரோல்களில் நடித்து பிரபலமானார்.

சினிமாவில் இவருக்கு நெருங்கிய நண்பராக சிவகார்த்திகேயன், விஷால் போன்றோர் உள்ளனர்.

பரோட்டா காமெடியில் பிரபலமான சூரி

சினிமாவில் யதார்த்த நடிப்புக்கு பெயர் போனவர் நடிகர் வடிவேலு. என் ராசாவின் மனசுல படத்தில் சிறிய ரோலில் நடித்து பின்னர் படிப்படியாக உயர்ந்து சந்திரமுகி படத்தில் முதலில் அவர் கால்ஷீட்டை வாங்குங்கள் என ரஜினிகாந்த் சொல்லும் அளவுக்கு உயர்ந்தவர். அவருக்குப்பின் சினிமாவில் தென் மாவட்ட தமிழ் பேசி நடிக்கும் நடிகர்களுக்கு மவுசு ஏற்பட்டது. அந்த வழியில் வந்து தயாரானவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா பந்தயம் போட்டு சாப்பிடும் காட்சியில் இயல்பாக நடித்து தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தார்.

பரோட்டா கடை அலம்பல்

பரோட்டா கடை அலம்பல்

பரோட்டா கடைக்கும் வரும் சூரியும் அவரது நண்பர்களும் பரோட்டா கடையின் பந்தயம் பற்றி கேட்பார்கள். 50 பரோட்டா சாப்பிட்டால் பரோட்டா பணம் தரவேண்டாம் 100 ரூபாய் பரிசுன்னு சொல்வார் ஹோட்டல்காரர். பந்தயத்துல நான் கலந்துக்கலாமான்னு சூரி கேட்க இவனைத்தவிர யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம்னு குண்டாக இருப்பவரை காட்டுவார் ஹோட்டல்காரர். பின்னர் போட்டியில் கலந்துக்கொள்ளும் சூரி அசால்டாக 50 பரோட்டாவை சாப்பிடுவார். ஹோட்டல்காரர் ஏமாற்றுவதற்காக 42 தான் சாப்பிட்டாய் எனக்கூற, நீங்க ஏமாத்துறீங்க கோட்ட அழிங்க முதலில் இருந்து ஆரம்பிப்போம் என்பார் சூரி. ஓட்டல்காரர் விக்கித்து போவார். இந்தக்காட்சியில் பரோட்டா சூரியின் உடல்மொழி பிரமாதமாக இருக்கும்.

உயர்வை தந்த பரோட்டா சூரி பாத்திரம்

உயர்வை தந்த பரோட்டா சூரி பாத்திரம்

அதுவரை வடிவேலுவின் இயல்பான காமெடியை பார்த்தவர்கள் இது யார் என சூரியை கவனிக்க ஆரம்பித்தனர், இதன் பின்னர் பரோட்டா சூரி இவரது அடையாளப்பெயர் ஆனது. மற்றவர்கள் இவரை குறிப்பிட அந்த பரோட்டா காமெடியில் வருவாரே அவர் என கூறும் அளவுக்கு சூரி பிரபலமானார். இது நடந்தது 2009 ஆம் ஆண்டு. அதன் பின்னர் பரோட்டா சூரியின் திரையுலக பயணம் வெற்றிப்பயணமாக மாறியது. ஆனால் அதற்கு முன் அவர் திரையுலகில் கால் பதிக்க 12 ஆண்டுகள் போராடியுள்ளார் என்பது பலருக்கு தெரியாது.

அட இந்த படத்திலா அறிமுகமானார்?

அட இந்த படத்திலா அறிமுகமானார்?

சூரி இன்று விஜய்யுடன் பல படங்களில் நடித்தாலும், விஜய் நடித்த காதலுக்கு மரியாதைத்தான் சூரியின் முதல்படம் என்பது யாருக்கும் தெரியாது. 1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை படத்தில் கும்பலில் ஒருவராக நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. காதலுக்கு மரியாதைக்குப்பின் 1998 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி, சங்கமம், நினைவிருக்கும் வரை,ஜேம்ஸ் பாண்டு, அஜித் படமான ரெட், வின்னர் படத்தில் கூட்டத்தோடு ஒருவராக, 2004 ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் விடுதி தங்குபவராக என சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில்தான் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிக்குழு படம் திரும்பிப்பார்க்க வைத்தது.

லாரி கிளினர், கலை இயக்குநரின் உதவியாளர்

லாரி கிளினர், கலை இயக்குநரின் உதவியாளர்

இடையில் பட வாய்ப்பில்லாத காலங்களில் ஆரம்பத்தில் லாரி கிளினராக வேலை பார்த்துள்ளார். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்த நாட்களில் கலை இயக்குநர் தோட்டாத்தரணியிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பின் விமல் நடித்த களவாணி படத்தில் நண்பராக வருவார் அது மேலும் அவருக்கு அறிமுகத்தை கொடுத்தது. 2010 மற்றும் 2011 ஆண்டுகள் சூரிக்கு சிறப்பானதாக அமைந்தது. அந்த நேரத்தில் வடிவேலு அரசியல் பக்கம் கால் பதிக்க அங்கிருந்த இடைவெளியையும், வடிவேலு அளவுக்கு பட்ஜெட் இல்லாதவர்கள் சூரியையும் நாட ஆரம்பித்தனர்.

விஜய்யுடன் நடித்த படம்

விஜய்யுடன் நடித்த படம்

விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தது திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் ஜில்லா படத்தில் முழு நேர நகைச்சுவையாளராக நடிதது மேலும் அவருக்கான வாய்ப்பை அதிகரித்தது. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் முடிவுக்கு தாவ, கிராம வேடங்களில் பொருத்தமானவர் சூரி என்கிற எண்ணமும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பை பெற்றுத்தந்தது. அந்த நேரத்தில் வளர்ந்து வந்த நடிகர்கள் விமல், சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்கள் நடித்தார். அதில் முக்கியமானது கேடி பில்லா கில்லாடி ரங்கா.

திருப்புமுனை ஏற்படுத்திய படங்கள்

திருப்புமுனை ஏற்படுத்திய படங்கள்

திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலா, ரஜினி முருகன் ஆகிய படங்களைச் சொல்லலாம். நீண்ட காலத்துக்குப்பின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் விஷ்ணுவிஷாலுடன் இணைய புஷ்பா புருஷன் கேரக்டர் பெருவெற்றியை கொடுத்தது. சிங்கம் 3, கடைக்குட்டி சிங்கம், அண்ணாத்த, டான், தற்போது விருமன் என முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துவிட்டார். இந்த ஆண்டு சூரிக்கு விசேஷமான ஆண்டு எனலாம். புகழ்பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவே நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் திருமண நாள் சூரியின் பிறந்த நாள் ஆகும்

சிவகார்த்திகேயன் திருமண நாள் சூரியின் பிறந்த நாள் ஆகும்

புதிய இயக்குநர்கள் சுசீந்திரன், சமுத்திரக்கனி, பொன்ராம், ஹரி, பாண்டிராஜ், முத்தையா என அனைவருடனும் நல்ல கெமிஸ்ட்ரியில் உள்ளவர் அதேபோல் விமல், சசிகுமார், சிவகார்த்திகேயன், விஷால் கூட்டணியும் பல படங்களில் சூரியை புகழ்பெற வைத்தது. சூரியின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் திருமண நாளும் சூரியின் பிறந்த நாளும் ஒரே நாள் என்பது இன்னும் சிறப்பான ஒன்று. சூரி இரட்டையராக பிறந்தவர். அவரது தம்பி லட்சுமணன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.