இளவரசி டயானாவின் பிரத்யேக கார் ஏலம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

இளவரசி டயானாவுக்காக பிரத்யேகமாக கருப்பு வண்ணம் பூசப்பட்ட கார் ஏலத்தில் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து இளவரசி டயானாவின் கறுப்பு நிற கார் அவர் மறைந்த 25 ஆண்டுகள் கழித்து தற்போது ஏலம் விடப்பட்டு உள்ளது.

இந்த சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாகவும் ஏலம் எடுத்தவரின் பெயரை ஏல நிறுவனம் அறிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பணத்தை கொட்டும் ஜப்பான் சுசூகி.. புதிய அறிவிப்பு..!

இளவரசி டயானாவின்

இளவரசி டயானாவின்

இளவரசி டயானாவின் கருப்பு நிற ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ கார் ரூ.6,09,38,283க்கு ஏலத்தில் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, தனித்துவம் வாய்ந்த இந்த கருப்பு ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ காரில் கடந்த 1980 களில் இளவரசி டயானா பயன்படுத்தினார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1988ஆம் ஆண்டு மே வரை இளவரசி டயானா இந்த காரை பயன்படுத்தினார்.

ஏலத்தில் விற்பனை

ஏலத்தில் விற்பனை

இந்த நிலையில் இளவரசி டயானா மறைந்து நாளை மறுநாளுடன் 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட் என்ற ஏல நிறுவனத்தின் மூலம் டயானாவின் கார் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டயானாவின் கடைசி கார்
 

டயானாவின் கடைசி கார்

சில்வர்ஸ்டோன் ஏல நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி இந்த கார் 24,961 மைல்கள் ஓடியுள்ளது. இளவரசி டயானா பயன்படுத்திய கடைசி கார் இதுதான் என்பதும், இந்த காரில் இளவரசி அடிக்கடி செல்சியா மற்றும் கென்சிங்டனை சுற்றி காரை வருவார் என்றும் கூறப்படுகிறது.

ஏலம் எடுத்தது யார்

ஏலம் எடுத்தது யார்

இந்த காரை ஏலத்தில் எடுத்தது யார் என்று சில்வர்ஸ்டோன் ஏல நிறுவனம் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஏலம் எடுத்தது பிரிட்டனை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

ஒரே கார்

ஒரே கார்

இளவரசியின் இந்த கார் மட்டுமே கருப்பு வண்ணத்தில் உள்ளது. பொதுவாக ஆர்எஸ் டர்போ சீரிஸ் 1 ​​வழக்கமாக வெள்ளை நிறத்தில் தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் அரச குடும்பத்தினர் கேட்டு கொண்டதாலும், டயானாவின் விருப்பத்திற்கு இணங்கவும் கருப்பு வண்ணம் பூசப்பட்டதால் ஆர்எஸ் டர்போ சீரிஸ் 1 ​​மாடலில் கருப்பு வண்ணம் பூசப்பட்டது இந்த ஒரே ஒரு கார் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார் விபத்து

கார் விபத்து

இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது 36 வயதில் விபத்து ஒன்றில் காலமானார். பாப்பராசிகள் மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்றபோது, ​​அவர் பயணித்த லிமோசின் கார் ஒரு பாரிஸ் சுரங்கப்பாதையில் விபத்துக்குள்ளானதால் அவரது உயிர் பிரிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Princess Diana’s black Ford Escort RS Turbo gets sold for Rs 6,09,38,283 for auction

Princess Diana’s black Ford Escort RS Turbo gets sold for Rs 6,09,38,283 for auction | இளவரசி டயானாவின் பிரத்யேக கார் ஏலம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

Story first published: Monday, August 29, 2022, 14:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.